ஜெய்ப்பூரில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது – ரூ.4 கோடி பணம் பறிமுதல்

ஜெய்ப்பூரில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது – ரூ.4 கோடி பணம் பறிமுதல்

ராஜஸ்தானில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக 4 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

ஜெய்ப்பூர்:

13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடின.

இந்நிலையில், ராஜஸ்தானில் சிலர் ஐ.பி.எல். போட்டி சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை தொடர்ந்து ஜெய்ப்பூரில் நகர காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 கோடி பணம், 19 கைபேசிகள் மற்றும் 2 பணம் எண்ணும் இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja