இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்

இப்படியெல்லாம் நடந்தால் பிளே-ஆஃப்ஸ் சுற்று வாய்ப்பு: கணக்குப்போடும் சிஎஸ்கே ரசிகர்கள்

10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

ஐபிஎல் தொடங்கிய 2008-ம் வருடத்தில் இருந்து 2019 வரை நடைபெற்ற தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்தது கிடையாது. இந்த முறை அதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

இதுவரை 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று கீழ்கண்ட மாதிரி நடைபெற்றால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு வாய்ப்பு உண்டு என ரசிகர்கள் நம்பிக்கையில் உள்ளனர்.

சென்னை அணி மும்பை, ஆர்சிபி, கொல்கத்தா, பஞ்சாப் அணிகளுடன் விளையாட வேண்டியுள்ளது. இந்த நான்கிலும் வெற்றி பெற்றாக வேண்டும். அதேவேளையில் தற்போது முதல் மூன்று இடங்களில் இருக்கும் மும்பை. ஆர்சிபி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் தங்களுடைய வெற்றியை அப்படியே தொடர வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஜெயிக்க வேண்டும். ஐதராபாத், பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு போட்டிகளுக்கு மேல் ஜெயிக்கக் கூடாது. இப்படி நடந்தால் சென்னை 14 புள்ளிகளுடன் டெல்லி, மும்பை, ஆர்சிபி அணிகளுடன் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja