ஐபிஎல் பருவத்தில் டாஸ் எந்த வகையில் பயன் அளித்திருக்கிறது?

ஐபிஎல் பருவத்தில் டாஸ் எந்த வகையில் பயன் அளித்திருக்கிறது?

கிரிக்கெட் போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும். சில ஆடுகளத்தில் டாஸ் வென்றாலே போட்டியை வென்றதற்கு சமம் என்பார்கள். இந்த ஐபிஎல் தொடரில் எப்படி என்று பார்ப்போம்.

ஐபிஎல் தொடர் என்றாலே கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து விடுவார்கள். அந்த அளவிற்கு பந்துகள் சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பறக்கும். மேலும், சேஸிங் செய்யும் அணி மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும். இதனால் டாஸ் வென்ற அணிகள் கண்ணை மூடிக்கொண்டு சேஸிங்கை தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால், இந்த பருவத்தில் சேஸிங் எடுத்த அணிகள் எல்லாமல் முதலில் தோல்விகளை சந்தித்தன. முதல் 13 போட்டிகளில் டாஸ் வென்று தோல்விகளை சந்தித்தது.

இந்தத் தொடரில்தான் டாஸ் வென்ற அணிகள் இதுவரை அதிக அளவில் தோல்விகளை சந்தித்துள்ளன. இதுகுறித்து பார்க்கலாம்.

இந்த பருவத்தில் இதுவரை நடைபெற்ற 40 போட்டிகளில் டாஸ் வென்ற அணி 13 முறைதான் வெற்றி பெற்றது. 27 முறை தோல்வியை சந்தித்துள்ள.

2015-ல் 59 போட்டிகளில் 28 வெற்றி, 29 தோல்வி 2008-ல் 58 போட்டிகளில் 28 வெற்றி 30 தோல்வி 2013-ல் 46 போட்டிகளில் 36 வெற்றி, 40 தோல்வி 2012-ல் 75 போட்டிகளில் 33 வெற்றி 41-ல் தோல்விகளை சந்தித்துள்ளன.

பஞ்சாப் அணி டாஸ் வென்ற மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ராஜஸ்தான் 5-ல் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. டெல்லி 4-ல் ஒன்றிலும், கேகேஆர் 6-ல் இரண்டிலும், ஆர்சிபி 5-ல் இரண்டிலும், ஐதரபாத் 7-ல் மூன்றிலும், மும்பை 4-ல் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளன.

முதல் 14 போட்டிகளில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்த அணிகள் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடைசி 20 போட்டிகளில் 3 முறை பீல்டிங் கேட்டது. இதில் 2 முறை வெற்றி பெற்றுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja