சிஎஸ்கே முதலில் மட்டையாட்டம்: மும்பை அணிக்கு பொல்லார்ட் கேப்டன்- சென்னையில் 3 மாற்றம்

சிஎஸ்கே முதலில் மட்டையாட்டம்: மும்பை அணிக்கு பொல்லார்ட் கேப்டன்- சென்னையில் 3 மாற்றம்

ஷார்ஜாவில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் ரோகித் சர்மா விளையாடவில்லை.

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் பொல்லார்ட் கேப்டனாக செயல்படுகிறார். அவர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கேதர் ஜாதவ், சாவ்லா, வாட்சன் நீக்கப்பட்டு ருத்து ராஜ், ஜெகதீசன், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மும்பை அணி விவரம்:

1. குயின்டான் டி காக், 2. சவுரப் திவாரி, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. நாதன் கவுல்டர் நைல், 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

சி.எஸ்.கே. அணி விவரம்:-

1. சாம் கர்ரன், 2. டு பிளிஸ்சிஸ், 3. அம்பதி ராயுடு,  4. என். ஜெகதீசன், 5. எம்எஸ் டோனி, 6. ருத்துராஜ் கெய்க்வாட், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர்,  9.ஷர்துல் தாகூர், 10. ஹசில்வுட், 11. இம்ரான் தாஹிர்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja