இங்கிலாந்து ஒருநாள் தொடர்: டு பிளிஸ்சிஸ்க்கு ஓய்வு- ரபடா காயம்

இங்கிலாந்து ஒருநாள் தொடர்: டு பிளிஸ்சிஸ்க்கு ஓய்வு- ரபடா காயம்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டு பிளிஸ்சிஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் கடந்த 27-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை நடைபெற்றது. மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது. 6-ந்தேதி 2-வது ஒருநாள் போட்டியும், 9-ந்தேதி கடைசி போட்டியும் நடக்கிறது.

இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான டு பிளிஸ்சிஸ்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரபாடா காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஐபிஎல் உள்ளிட்டு ஏராளமான போட்டிகளில் விளையாடியதால் டு பிளிஸ்சிஸ்க்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது என தென்ஆப்பிரிக்கா தெரிவித்துள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja