ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை கடைசி கட்டத்தில் இழந்தார் அங்கிதா

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்: முதன்மை சுற்றுக்கான வாய்ப்பை கடைசி கட்டத்தில் இழந்தார் அங்கிதா

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் முதன்மை சுற்றுக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை அங்கிதா கடைசி சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

அங்கிதா ரெய்னா

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான முதன்மை சுற்றில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் இந்திய வீராங்கனை அங்கிதா கலந்து கொண்டு விளையாடினார். கடைசி சுற்றில் செர்பியாவின் ஒல்கா டேனிலோவிச்சை எதிர்கொண்டார். இதில் இரண்டு மணி நேரம் போராடிய அங்கிதா 2-6, 6-3, 1-6 எனத் தோல்வியடைந்து முதன்மை சுற்றில் விளையாடும் வாய்ப்பை இழந்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja