ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து : சென்னை-பெங்கால் ஆட்டம் ‘டிரா’

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் 63-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்கால் அணியின் ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிந்தது.

கோப்புப்படம்

கோவா:

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 63-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஈஸ்ட் பெங்காலை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 31-வது நிமிடத்தில் பெங்கால் அணி வீரர் அஜய் சேத்ரி ‘பவுல்’ செய்ததால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் பெங்கால் அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது.

ஆனாலும் அந்த அணியின் கோல் கீப்பர் தேவ்ஜித் முஜூம்தர் திறம்பட செயல்பட்டு சென்னை அணியின் கோல் முயற்சிகளை முறியடித்தார். சென்னை தரப்பில் 6 முறை இலக்கை நோக்கி பந்தை அடித்த போதிலும் ஏமாற்றமே மிஞ்சியது. முடிவில் இந்த ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது. 12-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணி 3 வெற்றி, 6 டிரா, 3 தோல்வி என்று 15 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் (இரவு 7.30 மணி) மோதுகின்றன

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja