ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து 66-வது லீக் ஆட்டத்தில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தியது.

கோவா:

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 66-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் ஏ.டி.கே. மோகன் பகானை எதிர்கொண்டது. பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதிலும், ஷாட் அடிப்பதிலும் மோகன் பகான் அணி ஆதிக்கம் செலுத்திய போதிலும் அவ்வளவு எளிதில் சென்னை அணியின் தடுப்பு அரணை உடைக்க முடியவில்லை.

ஒரு வழியாக கடைசி நிமிடத்தில் மோகன் பகான் வீரர் டேவிட் வில்லியம்ஸ் கோல் அடித்தார். முடிவில் மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி.யை வீழ்த்தி 7-வது வெற்றியை ருசித்தது. சென்னை அணிக்கு இது 4-வது தோல்வியாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் (இரவு 7.30மணி) ஈஸ்ட் பெங்கால்-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja