ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: வங்காளதேச பந்து வீச்சாளர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: வங்காளதேச பந்து வீச்சாளர் 4-வது இடத்திற்கு முன்னேற்றம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சிறப்பாக பந்து வீசியதன் மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் வங்காளதேச பந்து வீச்சாளர் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வங்காளதேசம் சென்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் வங்காளதேச அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்தத் தொடரில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர் மெஹிதி ஹசன் சிறப்பாக பந்து வீசினார். அவர் 7 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

இதன்மூலம் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு முன்னேறினார். இதற்கு முன் 13-வது இடத்தில் இருந்தார். தற்போது 9 இடங்கள் முன்னேறியுள்ளார்.

டிரென்ட் போல்ட் முதல் இடத்திலும், முஜீப் உர் ரஹ்மான் 2-வது இடத்திலும், பும்ரா 3-வது இடத்திலும் நீடிக்கின்றனர். கிறிஸ் வோக்ஸ் ஒரு இடம் சரிந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் ரபடா 5-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கும், ஹசில்வுல் 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கும் சரிந்துள்ளனர்.

முஷ்டாபிஜுர் ரஹ்மான் 11 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். பேட் கம்மின்ஸ் 2 இடங்கள் சரிந்து 10-வது இடத்தில் உள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja