சையத் முஷ்டாக் அலி டிராபி டி20: ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சையத் முஷ்டாக் அலி டிராபி டி20: ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஹரியானாவை வீழ்த்தி பரோடா அரையிறுதிக்கு முன்னேறியது.

சையத் முஷ்டாக் டிராபி டி20 தொடரின் நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் அகமதாபாத்தில் உள்ள சர்தால் பட்டேல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஹரியானா – பரோடா அணிகள் மோதின.

முதலில் மட்டையாட்டம் செய்த ஹரியானா 7 மட்டையிலக்கு இழப்பிற்கு 148 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் 148 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பரோடா அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் கேதார் தேவ்தார் 40 பந்தில் 43 ரன்களும், ஸ்மித் பட்டேல் 21 பந்தில் 21 ரன்களும் எடுத்தனர்.

ஆனால் 3-வது நபராக களம் இறங்கிய விஷ்னு சோலங்கி அதிரடியாக விளையாடினார். பரோடா அணியின் வெற்றிக்கு கடைசி 3 பந்தில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

சோலங்கி 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். 5-வது பந்தில் பவுண்டரி விளாசினார். இதனால் கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சோலங்கி டோனி ஸ்டைலில் உலங்கூர்தி ஷாட் மூலம் சிக்ஸ் விளாச பரோடா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்து அரையிறுதிக்கு முன்னேறியது. விஷ்னு சோலங்கி 46 பந்தில் 71 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja