சையது முஷ்டாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டி: சித்தார்த் சுழலில் சிக்கிய பரோடா- தமிழ்நாடு சாம்பியன்

சையது முஷ்டாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டி: சித்தார்த் சுழலில் சிக்கிய பரோடா- தமிழ்நாடு சாம்பியன்

குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி டிராபி டி20 இறுதிப் போட்டியில் பரோடாவை வீழ்த்தி தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சையது முஷ்டாக் அலி டிராபி டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்தார் பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு- பரோடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற தமிழ்நாடு பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்பின் பரோடா அணி முதலில் மட்டையாட்டம் செய்தது. தமிழ்நாடு அணி கேப்டன் தினேஷ் கார்த்தில் தொடக்கத்தில் இருந்து சுழற்பந்து வீச்சை பயன்படுத்தினார். மணிமாறன் சித்தார்த் அபாரமாக பந்து வீசி 4 மட்டையிலக்கு சாய்க்க, பரோடா தொடக்கத்திலேயே தள்ளாட ஆரம்பித்தது.

3-வது வீரராக களம் இறங்கிய வி. சோலங்கி அதிகபட்சமாக 55 பந்தில் 49 ஓட்டங்கள் சேர்த்தார். இவரது ஆட்டத்தால் பரோடா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 மட்டையிலக்கு இழப்பிற்கு 120 ரன்களே அடித்தது.

தமிழ்நாடு அணி சார்பில் மணிமாறன் சித்தார்த் 4 சுற்றில் 20 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 மட்டையிலக்கு வீழ்த்தினார். பாபா அபரஜித், சோனு யாதவ், எம். முகமது ஆகியோர் தலா 1 மட்டையிலக்கு வீழ்த்தினர்.

பின்னர் 121 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு அணியின் ஹரி நிஷாந்த், என். ஜெகதீசன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெகதீசன் 14 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபா அபரஜித் நிலைத்து நின்று விளையாடினார். ஹரி நிஷாந்த் 35 ஓட்டங்கள் விளாசினார். தினேஷ் கார்த்திக் 16 பந்தில் 22 ஓட்டங்கள் விளாசினார்.

ஷாருக் கான் 7 பந்தில் 18 ஓட்டங்கள் விரட்ட தமிழ்நாடு 18 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 123 ஓட்டங்கள் எடுத்து 7 மட்டையிலக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பாபா அபரஜித் 35 பந்தில் 29 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 மட்டையிலக்கு வீழ்த்திய மணிமாறன் சித்தார்த் ஆட்டநாயகள் விருதை வென்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja