வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் சோதனை: வங்காளதேசம் முதல் நாளில் 242/5

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் சோதனை: வங்காளதேசம் முதல் நாளில் 242/5

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான முதல் தேர்வில் வங்காளதேசம் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 242 ஓட்டங்கள் அடித்துள்ளது.

வங்காளதேசம் – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் சோதனை சிட்டோகிராமில் உள்ள ஜகுர் அகமது சவுத்ரி மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேசம் மட்டையாட்டம் தேர்வு செய்தது.

ஷத்மான் இஸ்லாம், தமிம் இக்பால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தமிம் இக்பால் 9 ஓட்டத்தில் வெளியேறினார். ஆனால் ஷத்மன் இஸ்லாம் அரைசதம் அடித்தார். இருந்தாலும் அவர் 59 ஓட்டத்தில் வெளியேறினார்.

அதன்பின் வந்த மொமினுல் ஹக் (26), முஷ்பிகுர் ரஹிம் (38), நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (25) சீரான இடைவெளியில் வெளியேறினர்.

6-வது மட்டையிலக்குடுக்கு ஷாகிப் அல் ஹசன் உடன் லித்தோன் தாஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 49 ஓட்டங்கள் சேர்த்து முதல்நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் மட்டையிலக்கு இழக்காமல் பார்த்துக் கொண்டது.

இதனால் வங்காளதேசம் முதல் நாள் ஆட்ட முடிவில் 5 மட்டையிலக்கு இழப்பிற்கு 242 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஷாகிப் அல் ஹசன் 39 ரன்களுடனும், லித்தோன் தாஸ் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ஜோமெல் வாரிகன் 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja