சென்னை சோதனை கிரிக்கெட்- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாட்டம் தேர்வு

சென்னை சோதனை கிரிக்கெட்- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாட்டம் தேர்வு

இந்தியாவுக்கு எதிரான முதல் சோதனை கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாட்டம் தேர்வு செய்துள்ளது.

சென்னை:

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 சோதனை, ஐந்து 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் சோதனை தொடர் நடத்தப்படுகிறது.

இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது சோதனை போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி மட்டையாட்டம்கை தேர்வு செய்தது. 

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் போட்டியில் இருந்து விலகி உள்ளார். நேற்றைய பயிற்சியின்போது இடது முழங்காலில் காயமடைந்ததால் அவர் முதல் போட்டியில் இருந்து விலகியதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. சுழற்பந்து வீச்சாளர் ஷாபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலுக்கு பிறகு ஓராண்டு கழித்து இந்தியாவில் நடக்கும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும். கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் இந்த சோதனை போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

உள்நாட்டில் இந்தியா எப்போதும் பலம்வாய்ந்த அணியாகவே விளங்குகிறது. அத்துடன், சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் சோதனை தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்டுடன் விலகிய நிலையில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பிரமாதப்படுத்தியது. தற்போது விராட் கோலி அணிக்கு திரும்பியிருப்பதால் மட்டையாட்டம் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது. 

ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த மாதம் இலங்கை மண்ணில் சோதனை தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்திய கையோடு மிகுந்த நம்பிக்கையுடன் இந்தியாவில் கால்பதித்து இருக்கிறது. எனவே இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடி அளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் வீரர்கள் வருமாறு:

இந்தியா:  ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி (கேப்டன்), புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் ஷர்மா, பும்ரா, நதீம்.

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, லாரன்ஸ், ஜோ ரூட் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், ஜோஸ் பட்லர், டி பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja