ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு ஆட்டம் டிரா

கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-பெங்களூரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

கோவா:

7-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 83-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.-சென்னையின் எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

பெங்களூரு அணி தான் ஆடியுள்ள 16-வது ஆட்டத்தில் 4 வெற்றி, 7 டிரா, 5 தோல்வியுடன் 6-வது இடத்தில் உள்ளது.

சென்னை அணி 3 வெற்றி, 8 டிரா, 5 தோல்வியுடன் 8-வது இடத்திலும் உள்ளது.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.- ஏ.டி.கே. மோகன் பகான் அணிகள் சந்திக்கின்றன.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja