பிக் பாஷ் லீக் – பெர்த் ஸ்கார்சர்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ்

பிக் பாஷ் லீக் – பெர்த் ஸ்கார்சர்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ்

சிட்னியில் நடந்த பிக் பாஷ் லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சிட்னி சிக்சர்ஸ் அணி.

சிட்னி:

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பிக் பாஷ் லீக் தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் சிட்னி சிக்சர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சிட்னி சிக்சர்ஸ் அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர் ஜேம்ஸ் வின்ஸ் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 95 ஓட்டத்தை எடுத்து அவுட்டானார். கிறிஸ்டியன் 20 ரன், ஹென்ரிக் 18 ஓட்டத்தை எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 மட்டையிலக்குடுக்கு 188 ஓட்டங்கள் எடுத்தது.

இதையடுத்து, 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்சர்ஸ் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பான்கிராப் 30 ரன்னும், லிவிங்ஸ்டோன் 45 ரன்னும் எடுத்து வெளியேறினர். ஆரோன் ஹார்டி 26 ரன்னும், இங்லிஸ் 22 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.

இறுதியில், பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி 20 சுற்றில் 9 மட்டையிலக்குடுக்கு 161 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 27 ஓட்டத்தை வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஜேம்ஸ் வின்ஸ் ஆட்ட நாயகனாகவும், ஜோஷ் பிலிப் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பிக் பாஷ் லீக் தொடரின் சாம்பியன் பட்டத்தை சிட்னி சிக்சர்ஸ் அணி மூன்றாவது முறையாக கைப்பற்றி அசத்தியுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja