ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் –  ரபெல் நடால், மெத்வதேவ் 4வது சுற்றுக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால், மெத்வதேவ் 4வது சுற்றுக்கு தகுதி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், மெத்வதேவ் ஆகியோர் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மெல்போர்ன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 6-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும், தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், 69-ம் நிலை வீரரான கேமரூன் நோர்ரியை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.

விறுவிறுப்பானக நடைபெற்ற  இந்த ஆட்டத்தில் நடால் 7-5, 6-2, 7-5 என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 14-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இதேபோல், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவ் 6-3, 6-3, 4-6, 3-6, 6-0 என்ற செட் கணக்கில் போராடி செர்பியாவின் கிராஜ்னோவிச்சை வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.
சர்வதேச டென்னிசில் மெத்வதேவ் தொடர்ச்சியாக பெற்ற 17-வது வெற்றி இதுவாகும். அத்துடன் 5 செட் வரை நீடித்த ஒரு ஆட்டத்தில் மெத்வதேவ் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja