ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கால்இறுதியில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : கால்இறுதியில் ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார்.

மெல்போர்ன்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் 7-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, (7-4), 4-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் 14-ம் நிலை வீரரான மிலோஸ் ராவ்னிக்கை (கனடா) வெளியேற்றி 12-வது முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஜோகோவிச் பெற்ற 300-வது வெற்றி இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 7-6 (7-5), 6-3 என்ற நேர்செட்டில் செர்பியாவின் துசன் லாஜோவிச்சை சாய்த்து தொடர்ந்து 2-வது முறையாக கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja