சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் சிறப்பான வகையில் இருந்தது: கவுதம் கம்பிர்

சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் சிறப்பான வகையில் இருந்தது: கவுதம் கம்பிர்

ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் சிறப்பான வகையில் வீரர்களை ஏலம் எடுத்தது என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் வீரர்கள் ஏலம் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. 2020 பருவத்தில் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் சென்னை அணி ஏறக்குறைய முழுவதுமாக மாற்றமடைய வேண்டும் ரசிகர்கள் விரும்பினார்கள்.

மிடில் வாங்குதல் மட்டையாட்டம்கை வலுப்படுத்த மேக்ஸ்வெல்லை சென்னை சூப்பர் கிங்ஸ் குறிவைத்தது. ஆனால் 14 கோடி ரூபாய்க்கு மேல் ஏலம் போனதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை ஏலம் எடுக்கவில்லை. கிருஷ்ணப்பா கௌதமை 9.25 கோடி ரூபாய்க்கும், மொயீன் அலியை 7 கோடி ரூபாய்க்கும் ஏலம் எடுத்தது.

மேக்ஸ்வெல்லுக்கு கொடுக்கக்கூடிய தொகையில் இருவரை ஏலத்தில் எடுத்துள்ளது. மேலும், புஜாராவை 50 லட்சத்திற்கும் கே.பகத் வர்மா, ஹரி நிஷாந்த், ஹரிசங்கர் ரெட்டி ஆகியோரை 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. கௌதம், மொயீன் அலி ஆகியோரைத் தவிர மற்ற நான்கு பேரையும் அடிப்படை விலையிலேயே வாங்கியுள்ளது.

மீண்டும் டேடி பேமிலியா…. என சிறு விமர்சனம் எழும்பிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலம் சிறப்பானது என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘மறுசீரமைப்பு எங்கே? எனக்கேட்கும் நிலையில் சிஎஸ்கே-வைவிட மற்ற அணிகள்தான் அதிக அளவில் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். கடந்த போட்டியில் பிளே-ஆப்ஸ் சுற்றுக்குக் கூட தகுதி பெறாததால், சிஎஸ்கே நோக்கி அந்த கேள்வி எழுந்தது.

ஆனால், ஆக்சனில் கலந்து கொண்டு 3 வீரர்களை தேர்வு செய்தது மகிழ்ச்சியானது. சிறந்த ஆக்சன் என்று நான் நினைக்கிறேன். தொடக்கத்தில் மேக்ஸ்வெல்லுக்காக கடுமையாக போராடினார்கள். பின்னர் ஏறக்குறைய அதே விலைக்கு கே. கௌதம், மொயீன் அலி ஆகியோரை எடுத்துள்ளனர். ஆகவே, ஒரு வீரருக்கான தொகையில் இரண்டு வீரர்களை எடுத்துள்ளனர்.

அவர்கள் மூன்று வீரர்களை மட்டுமே எடுத்துள்ளனர் என் ரசிகர்கள் கூறலாம். ஆனால், இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிறந்த ஆக்சன் என்பேன். ஆர்சிபி, பஞ்சாப் அணிகள் மிகப்பெரிய தொகைக்கு வீரர்களை எடுத்தனர். சிஎஸ்கே விரும்பியதை ஏலத்தில் எடுத்தார்கள். இது பணத்தை மிகப்பெரிய அளவில் செலவழிப்பது அல்ல, உங்கள் அணிக்கு வலு சேர்க்கும் வீரர்களை அணியில் சேர்ப்பது. இருவராலும் சென்னை அணிக்கு தொடரை வென்று கொண்டுக்க முடியும். சிஎஸ்கே-வுக்கு இரண்டு பேரும் சிறந்த ஆபசன்’’ என்றார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja