மும்பை ஓட்டலில் மக்களவை எம்.பி. பிணமாக கிடந்தார்: தற்கொலை என சந்தேகம்

மும்பை ஓட்டலில் மக்களவை எம்.பி. பிணமாக கிடந்தார்: தற்கொலை என சந்தேகம்

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சுயேட்டை மக்களவை எம்.பி. மனோகர் தெல்கர் ஓட்டலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் தாத்ரா அண்ட் நாகர் ஹவெளி மக்களவை தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் மோகன் தெல்கார். இவர் மும்பையின் மரைன் டிரைவில் உள்ள ஓட்டலில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். காவல் துறையினர் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.

மோகன் தெல்கர் மரணம் குறித்து காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘தற்கொலை கடிதம் கண்டெடுத்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது. உடல்பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சரியான காரணம் தெரியும்’’ எனத் தெரிவித்துள்ளனர்.

58 வயதாகிய மோகன் தெல்கர் ஏழு முறை எம்.பி.யாக பணியாற்றியுள்ளார். 2019-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004-ல் இருந்து தொடர்ந்து தாத்ரா அண்ட் நாகர் ஹவெளி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுப்பட்டவர்.

மோகன் தெல்கருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. 

[embedded content]

Source: Maalaimalar

Author Image
Ilayaraja