Press "Enter" to skip to content

சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வீழ்த்தி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை ருசித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் அபாரமான தொடக்கம் கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் எளிதாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தியது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் மட்டையாட்டம் தேர்வு செய்தது.

அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 7 ஓட்டத்தை எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து டேவிட் வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மணிஷ் பாண்டே 35 பந்திலும், வார்னர் 50 பந்திலும் அரைசதம் அடித்தனர். டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்களும், மணிஷ் பாண்டே 46 பந்தில் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

4-வது வீரராக களம்இறங்கிய கேன் வில்லியம்சன் 10 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ஓட்டங்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 சுற்றில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி 2 மட்டையிலக்குடும், சாம் கர்ரன் 1 மட்டையிலக்குடும் வீழ்த்தினர்.

பின்னர் 172 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டையாட்டம் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட்- டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட் 36 பந்திலும், டு பிளிஸ்சிஸ் 32 பந்திலும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி மட்டையிலக்குடை இழக்காமல் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷித் கான் பந்து வீச்சில் ருத்துராஜ் 44 பந்தில் 12 பவுண்டரியுடன் 75 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

டு பிளிஸ்சிஸ் – கெய்க்வாட் ஜோடி முதல் மட்டையிலக்குடுக்கு 13 சுற்றில் 129 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த மொயீன் அலி 8 பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், டு பிளிஸ்சிஸ் 38 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 56 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தனர்.

4-வது மட்டையிலக்குடுக்கு சுரேஷ் ரெய்னாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 சுற்றில் இலக்கை எட்டி ஆறு மட்டையிலக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 17 ரன்களுடனும், ஜடேஜா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 36 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையிலக்கு வீழ்த்தினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »