Press "Enter" to skip to content

மும்பை அணிக்கு எதிரான ஆட்டம்- டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்

சென்னை அணியில் மொயீன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33வது ஆட்டம் இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் மும்பை அணி முதலில் மட்டையாட்டம் செய்கிறது.

சென்னை அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொயீன் அலி மற்றும் கிறிஸ் ஜோர்டானுக்கு பதிலாக பிரிட்டோரியஸ் மற்றும் சான்ட்னர் ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளனர்.

ரிலே மெரிடித், ஹிருத்திக் அதிர்ச்சிகீன் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர். சென்னை அணியின் இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் வியூகத்துடன் ஆப்ஸ்பின்னராக அதிர்ச்சிகீன் களமிறக்கப்பட்டுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »