Press "Enter" to skip to content

ஐபிஎல் புள்ளிகள் பட்டியல் – முதல் இடத்துக்கு முன்னேறியது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை முடிவடைந்த போட்டிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் ஒரு வெற்றி கூட பெறாமல் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

மும்பை:

ஐபிஎல் 2022 பருவம் கிரிக்கெட்டில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடிய போட்டியுடன் இதுவரை 34 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் 7 போட்டிகளில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

குஜராத் டைட்டன்ஸ் 6 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், ஐதராபாத் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளது.

டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப், சென்னை மற்றும் மும்பை அணிகள் முறையே 6 முதல் 10 இடங்களை பெற்றுள்ளது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »