Press "Enter" to skip to content

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதி போட்டிக்கு ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் முன்னேற்றம்

நேற்று நடைபெற்ற அரைஇறுதியில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்சை வீழ்த்திய கார்லஸ் அல்காரஸ் வெற்றி பெற்றார்.

மாட்ரிட்:

ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி போட்டியில் டென்னிஸ் உலகின் நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் நாட்டின் இளம் வீரர் கார்லஸ் அல்காரஸ் எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் கார்லஸ் அல்காரஸ் 7-6 (7-5), 5-7, 6-7 (5-7) என்ற செட் கணக்கில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இதனிடையே கால்இறுதி போட்டி ஒன்றில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் அலியாசிமை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »