Press "Enter" to skip to content

டூபிளெசிஸ் அதிரடி- ஐதராபாத் அணிக்கு 193 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேட்பன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ஓட்டங்கள் விளாசினார்.

மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

டாஸ் வென்று முதலில் மட்டையாட்டம் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 மட்டையிலக்கு இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக கேப்டன் டூபிளெசிஸ் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 73 ஓட்டங்கள் விளாசினார். ரஜத் பட்டிதார் 48 ஓட்டங்கள், மேக்ஸ்வெல் 33 ஓட்டங்கள், தினேஷ் கார்த்திக் 30 ஓட்டங்கள் (நாட் ஒவுட்) எடுத்தனர்.

ஐதராபாத் அணி தரப்பில் ஜகதீஷா 2 மட்டையிலக்கு, கார்த்திக் தியாகி ஒரு மட்டையிலக்கு எடுத்தனர். இதையடுத்து 193 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »