Press "Enter" to skip to content

பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக்: 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெர்த் ஸ்கார்செர்ஸ்

பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது பெர்த் ஸ்கார்செர்ஸ்.

இந்தியாவில ஐ.பி.எல். தொடர் மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கடந்த 2011-ல் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் லீக் தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த தொடரின் 6-வது சீசன் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

லீக் ஆட்டங்கள் மற்றும் அரையிறுதிகள் முடிவில் சிட்னி ஸ்கார்செர்ஸ்- சிட்னி சிக்சர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. தொடக்க சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சிட்னி சிக்சர்ஸ் அதன்பின் 2014-15 சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. தற்போது 3-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டேனியல் ஹியூக்ஸ் 8 ரன்னில் அவுட்டாகிய சோகத்தில் வெளியேறும் காட்சி

பெர்த் ஸ்கார்செர்ஸ் அணி 2013-14, 2014-15 சீசனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தது. இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. கடந்த 2015-16 சீசனில் மட்டும்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை. 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணியும், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்தின.


3 விக்கெட் வீழ்த்திய ரிச்சர்ட்சனை பாராட்டும் சக வீரர்

டாஸ் வென்ற பெர்த் ஸ்கார்செர்ஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்சர்ஸ் அணியின் ஹியூக்ஸ், லம்ப் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஹியூக்ஸ் 8 ரன்கள் எடுத்த நிலையிலும், லம்ப் 5 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் வந்த மேடின்சன் 1 ரன்னில் வெளியேற 3 ஓவரில் 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து சிட்னி சிக்சர்ஸ் அணி திணறியது.


விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணியினர்

அதன்பின் வந்த ஹென்ரிக்ஸ் 21, பிராட் ஹடின் 38, போதா 32 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு சிட்னி சிக்சர்ஸ் அணி 141 ரன்கள் சேர்த்தது. பெர்த் ஸ்கார்செர்ஸ் அணியின் ரிச்சர்ட்சன், பிரேஸ்னன் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெர்த் ஸ்கார்செர்ஸ் அணியின் வைட்மேன், கிளிங்கர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் சிட்னி சிக்சர்ஸ் பந்து வீச்சை விளாசித் தள்ளினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 75 ரன்கள் குவித்தது. வைட்மேன் 21 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 41 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.


71 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமாக இருந்த கிளிங்கர்

அடுத்து வந்த இயன் பெல்லும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எதிர்முனையில் கிளிங்கெர் அரைசதம் அடிக்க பெர்த் ஸ்கார்செர்ஸ் அணி 15.5 ஓவரில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 144 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கிளிங்கர் 71 ரன்னுடனும், பெல் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் பெர்த் ஸ்கார்செர்ஸ் 3-வது முறையாக பிக் பாஷ் டி20 லீக் தொடர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.