Press "Enter" to skip to content

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்: இலங்கை 181 ரன்னில் சுருண்டது

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 181 ரன்னில் சுருண்டது. மெண்டிஸ் அதிகபட்சமாக 62 ரன்கள் சேர்த்தார்.

தென் ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் போர்ட் எலிசபெத்தில் இன்று தொடங்கியது. இலங்கை அணியில் வீரக்கொடி அறிமுகமானார்.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டிக்வெல்லா, வீரக்கொடி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 2-வது ஓவரின் முதல் பந்தில் டிக்வெல்லா 1 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். வீரக்கொடி 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுக்களையும் பர்னெல் வீழ்த்தினார்.

3-வது விக்கெட்டுக்கு குசால் மெண்டிஸ் உடன் விக்கெட் கீப்பர் சண்டிமல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தது. சண்டிமால் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். மெண்டிஸ் 62 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பின் சீரான இடைவெளியில் இலங்கை அணி விக்கெட்டுக்களை இழக்க 48.3 ஓவரில் 181 ரன்னில் சுருண்டது. தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் பர்னெல், இம்ரான் தாஹிர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »
Mission News Theme by Compete Themes.