Press "Enter" to skip to content

அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் – நடந்தது என்ன? மற்றும் பிற செய்திகள்

அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் – நடந்தது என்ன?

சட்டத்திற்கு புறம்பாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்ட ஒன்பது சுரங்க தொழிலாளர்கள் அடித்தே கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இந்த சம்பவமானது தென் ஆப்பிரிக்காவின் மேற்கு மாவட்டம் ஒன்றில் நடந்திருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த சுரங்க தொழிலாளர்களும் அவர்களது எதிர் தரப்புகளும் மோதிக் கொள்வது அவ்வப்போது அங்கு நடக்கும்.

சுரங்கத் தொழில் நடந்த பகுதியை போலீஸார் வெள்ளிக்கிழமை சோதனையிட்டனர். அதனை தொடர்ந்துதான் அங்கு சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்த ஒன்பது தொழிலாளர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. உலகிலேயே அதிக வன்முறை நடக்கும் பகுதிகளில் தென் ஆப்பிரிக்காவும் ஒன்று. கடந்தாண்டு தரவுகளின்படி, அங்கு ஒரு நாளுக்கு 58 கொலைகள் நடக்கின்றன.

சட்டத்திற்குப் புறம்பாக சுரங்க தொழிலில் ஈடுபடுபவர்கள் ஒரு பக்கம் என்றால் அங்குள்ள வைர சுரங்கங்களில் ஊழியர்கள் கட்டாயமாக பணியமர்த்தப்பட்டு சுரண்டப்படும் சம்பவங்களும் அதிகம் நடைபெறுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுகின்றன.

ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அண்மையில் வந்த கே.ஜி.எஃப் திரைப்படம் போல.

இது குறித்து விரிவாக படிக்க:நிஜ கே.ஜி.எஃப் கதை: வைர சுரங்கங்களில் ஆப்ரிக்கர்கள் சுரண்டப்படுகிறார்களா?

ஆனால், ஆப்பிரிக்கா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது.

டெல்லியில் மீண்டும் வெடித்த துப்பாக்கி

டெல்லி ஷாஹினபாக் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பெண்கள் 49-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்தப் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அந்த நபர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும், உடனடியாக போலீசார் அவரை மடக்கிப் பிடித்ததாகவும் துணை காவல் ஆணையர் சின்மயி பிஸ்வால் தெரிவித்துள்ளார் என்கிறது ஏ.என்.ஐ.செய்தி முகமை.

விரிவாகப் படிக்க:டெல்லியில் மீண்டும் வெடித்த துப்பாக்கி: இப்போது ஷாஹின்பாக் பகுதியில்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – இருவர் கைது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடுகள் வெளியான நிலையில், 2017ம் ஆண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2ஏ தேர்வில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை செய்துவந்த தமிழ்நாடு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை (சி.பி.சிஐடி) இருவர் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்து சனிக்கிழமை செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.

விரிவாகப் படிக்க:டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ தேர்வு முறைகேடு – இருவர் கைது

“இது வேலைவாய்ப்பை அதிகரிக்க வித்திடும் பட்ஜெட்”

2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (சனிக்கிழமை) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து, பட்ஜெட் குறித்து தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.

“2020-21 நிதி ஆண்டுக்கான இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை கருத்திற்கொண்டு தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய சூழலில் இளைஞர்களுக்கு விவசாயம், கட்டுமானம், ஜவுளி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய நான்கு துறைகளில் வேலைவாய்ப்பு அதிகம் இருக்கும். அதை உறுதி செய்யும் வகையில்தான் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது” எனக் கூறினார்.

விரிவாகப் படிக்க:“இது வேலைவாய்ப்பை அதிகரிக்க வித்திடும் பட்ஜெட்” – பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்

பட்ஜெட் பற்றி நிர்மலா சீதாராமன் என்ன சொல்கிறார்?

2020-2021ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று (சனிக்கிழமை) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பல்வேறு நிதியமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்.

விரிவாகப் படிக்க:பட்ஜெட் 2020: வெளிநாடுவாழ் இந்தியர்கள் வருமானவரி கட்ட வேண்டுமா? என்ன சொல்கிறார் நிர்மலா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from இந்தியாMore posts in இந்தியா »
More from தமிழகம்More posts in தமிழகம் »