Press "Enter" to skip to content

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

லண்டன்:

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 190-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 24 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஐந்தரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையில், ஐரோப்பிய நாடான இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இங்கிலாந்தில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நான் தனிமைப்படுத்துதலில் இருந்து வருகிறேன். ஆனாலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வைரசை கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறேன். நிச்சயம் நாம் அதனை தோற்கடிப்போம் என பதிவிட்டுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »