Press "Enter" to skip to content

பிரக்ஸிட்: பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறியது

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் அதிகாரபூர்வமாக வெளியேறியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் உறுப்பினராக இருந்து வந்த ஐக்கிய ராஜ்ஜியம் லண்டன் நேரப்படி இரவு 11 மணியளவில் இந்த வரலாற்று நிகழ்வு நடைபெற்றது.

ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்து இடம்பெற வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தெரிந்துகொள்ள மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு மூன்றாண்டுகளுக்கு முன்பு ஐக்கிய ராஜ்ஜியத்தில் நடத்தப்பட்டது.

ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் வெளியேற 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்திருந்தனர்.

இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் கொண்டாட்டங்களும், பிரக்ஸிட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய ராஜ்ஜியம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்காட்லாந்தில் மெழுகுவர்த்தி ஏந்தியும், லண்டன் நாடாளுமன்ற சதுக்கத்தில் பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களிலும் ஈடுபட்டனர்.

நாட்டை ஒற்றுமைப்படுத்தவும், முன்னெடுத்து செல்லவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி பூண்டுள்ளார்.

ஒன்றியத்திலிருந்து ஐக்கிய ராஜ்ஜியம் வெளியேறுவதற்கு சில நிமிடங்களுக்குமுன், இதுதொடர்பாக தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த அவர், பலருக்கு இது நம்பிக்கையின் வியக்கத்தக்கத் தருணம் என்றும், இந்த தருணம் ஒருபோதும் வராது என்று நினைத்திருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவால் பலர் கவலை மற்றும் இழப்பை உணர்ந்திருப்பார்கள் என்று குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், மூன்றாவதாக உள்ள ஒரு குழுவினர் இந்த மொத்த அரசியல் சண்டை சச்சரவுகளும் ஒருபோதும் முடிவுக்கு வராது என்று கவலைப்பட ஆரம்பித்ததாகவும், அனைத்து மக்களின் உணர்வுகளையும் தான் புரிந்து கொண்டு தன்னுடைய அரசு இந்த ஒற்றுமைப்படுத்தி முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »