Press "Enter" to skip to content

டிரம்ப்பை பாகுபலியாக சித்தரிக்கும் மீம் காணொளி: அவரே டிவிட்டரில் பகிர்ந்தார்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாளை இந்தியா வருவதுதான் இப்போது உலகத்தின் தலைப்பு செய்தி.

குஜராத்தின் அகமதாபாத் நகரத்திற்கு வரும் டிரம்ப், மொடேரா அரங்கத்தில் நடைபெறும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதா? இருநாட்டு தலைவர்களும் விவாதிக்கும் முக்கிய விஷயம் என்னவாக இருக்கும்? காஷ்மீர் விவகாரம் குறித்த பேச்சு வருமா என்று பல ஆய்வாளர்களும் விவாதித்துக் கொண்டிருக்க, அதிபர் டிரம்ப் பாகுபலி காணொளி ஒன்றை ரீட்வீட் செய்துள்ளார்.

அதில் ட்விட்டர் பயனர் ஒருவர், பாகுபலியில் இருக்கும் பிரபாஸ் முகத்திற்கு பதிலாக, அதிபர் டிரம்ப் முகத்தை பொறுத்தி மார்ஃப் செய்துள்ளார்.

அதில் மெலனியா டிரம்ப், பிரதமர் மோதிக்கும் சில பாத்திரங்கள் உள்ளன.

அதிபர் டிரம்ப், இந்த காணொளியை ரீட்வீட் செய்து, இந்தியா வருவது குறித்து மிகுந்த ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிபர் டிரம்பை வைத்து ஆயிரக்கணக்கான மீம்கள் இதுவரை வந்துள்ளன. இந்த பாகுபலி காணொளியை டிரம்ப் பகிர்ந்ததற்கு பல அமெரிக்கர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க சமூகவியலாளர் மற்றும் எழுத்தாளருமான பிலிப் என் கொஹேன், டிரம்ப் சர்வதேச அளவில் அவமானத்தை ஏற்படுத்தப் போவதாகவும், அவருடைய நண்பர்கள் எதேச்சாதிகாரிகள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு ட்விட்டர் பயனர் பாகுபலி காணொளி போன்று வேறு ஒரு பாலிவுட் பட பாடலை வைத்து மீம் செய்து வெளியிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »