Press "Enter" to skip to content

சிரியா – துருக்கி: குண்டுகளுக்கு நடுவே சிரிக்க பழகிய குழந்தைக்கு என்ன ஆனது தெரியுமா? மற்றும் பிற செய்திகள்

சிரியா – துருக்கி: குண்டுகளுக்கு நடுவே சிரிக்க பழகிய குழந்தைக்கு என்ன ஆனது தெரியுமா?

அண்மையில் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. அந்த காணொளியில் சிரியா நாட்டை சேர்ந்த ஒரு தந்தையான அப்துல்லா முஹம்மத் தன் குழந்தை சல்வாவுக்கு குண்டுகளின் சத்தத்திற்கு சிரிக்க கற்றுக் கொடுப்பார். அந்த காணொளி அனைவரது மனதையும் அசைத்து பார்த்தது.

இதனை அடுத்து அந்த குடும்பம் எல்லையைக் கடக்க துருக்கி அரசாங்கம் உதவியது. துருக்கி ஆதரவு பெற்ற சிரியா புரட்சி படைக்கும், சிரியா அரசுக்கும் இட்லிப் பகுதியில் சண்டை நடந்து வருகிறது. இதனை அடுத்து ஏறத்தாழ ஐந்து லட்சம் மக்கள் சிரியா- துருக்கி எல்லையில் அடைக்கலம் புகுந்துள்ளனர். அப்துல்லாவும் அவரது மூன்று வயது மகள் சல்வாவும் பாதுகாப்பாக எல்லையைக் கடந்ததாகவும், தெற்கு துருக்கியில் உள்ள ஒர் அகதிகள் முகாமும் அழைத்து செல்லப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு என்ன?

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் மேலும் இருவருக்கு உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து இந்தியாவில் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் பற்றி தற்போது இந்தியாவில் அதிகம் பேசப்படுகிறது. கடந்த ஆண்டின் இறுதியில் சீனாவில் தொற்றுநோயாகப் பரவத் தொடங்கிய இந்த வைரஸ், இப்போது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்துவதாக மாறியுள்ளது. அப்போதிலிருந்து இந்தியாவும் அதிக எச்சரிக்கையுடன் இருந்து வருகிறது.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிப்பு என்ன? – 7 முக்கிய தகவல்கள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: டெல்லியில் இரு பள்ளிகள் மூடல் – கடற்படை நிகழ்வு ரத்து

இந்தியாவில் புதிதாக இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா இருப்பதாக சந்தேகத்தின் பேரில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 6 நோயாளிகள் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விசாகப்பட்டனத்தில் கடற்படை மேற்கொள்ளவிருந்த சர்வதேச ஒத்திகை நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் டெல்லியில் ஒருவருக்கும், தெலங்கானாவில் ஒருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள் கிழமை உறுதி செய்யப்பட்டது.

விரிவாகப் படிக்க:இந்தியாவில் கொரோனா பாதிப்பு: டெல்லியில் இரு பள்ளிகள் மூடல் – கடற்படை நிகழ்வு ரத்து

குடியுரிமை திருத்த சட்டம்: உச்சநீதிமன்றத்தில் மனு செய்த ஐநா, இந்தியா எதிர்ப்பு

இந்தியாவின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ஐ.நா. மனித உரிமை அமைப்பு.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்திய உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் நீதிமன்றத்தின் நண்பனாக (அமிகஸ் கியூரி) பங்கேற்க தம்மை அனுமதிக்குமாறு கோரி ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மிச்சல் பேச்சலெட் ஜெரியா தலையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

விரிவாகப் படிக்க:குடியுரிமை திருத்த சட்டம்: உச்சநீதிமன்றத்தில் மனு செய்த ஐநா, இந்தியா எதிர்ப்பு

மலேசியாவில் மீண்டும் கொரோனா தாக்குதல்: ஒரே நாளில் 7 பேர் பாதிப்பு

மலேசிய அரசியல் களத்தில் நீடித்து வந்த பரபரப்பு சற்றே ஓயத்தொடங்கியுள்ள நிலையில், இங்கு ஒரே நாளில் 7 பேர் கொரோனா கிருமித் தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பரபரப்பு நிலவுகிறது.

கொரோனா கிருமித்தொற்று பாதிப்பு மலேசியாவில் கால்பதித்தது முதல் ஒரே நாளில் ஏழு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது இதுவே முதன் முறை.

விரிவாகப் படிக்க:மலேசியாவில் மீண்டும் கொரோனா தாக்குதல்: ஒரே நாளில் 7 பேர் பாதிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »