Press "Enter" to skip to content

ஓரினச் சேர்க்கை பற்றிய குறிப்பு: ஆன்வேர்ட் திரைப்படத்தை தடை செய்த மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பிற செய்திகள்

ஓரினச் சேர்க்கை திரைப்படம்: தடை செய்த மத்திய கிழக்கு நாடுகள்

லெஸ்பியன் பெற்றோர் தொடர்பான குறிப்புகள் உள்ளதால் ஆன்வேர்ட் திரைப்படத்துக்குத் தடை விதித்துள்ளன குவைத், ஓமன், கத்தார் மற்றும் செளதி அரேபியா ஆகிய நாடுகள்.

அதே நேரம், பஹ்ரைன், லெபனான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் ஓரினச் சேர்க்கை தொடர்பான காட்சிகள் ஏதும் இல்லை. ஆனால், அதில் ஒரு பெண் கதாபாத்திரம் தான் லெஸ்பியன் என்று மறைமுகமாகக் கூறுவது போன்ற வசனம் வரும். அதற்காகத்தான் இந்த நாடுகள் தடை விதித்துள்ளன. ரஷ்யா அந்த வசனத்தை மட்டும் நீக்கி உள்ளது. உலகமே கொரோனா அச்சத்தில் இருக்கும் போது வெளியாகி உள்ளதால், இந்த திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், பாக்ஸ் ஆஃபிஸில் எந்த சேதமும் இல்லை. அமெரிக்காவில் கடந்த வார இறுதியில் மட்டும் 40 மில்லியன் டாலர்களை இந்த திரைப்படம் வசூலித்துள்ளது.

கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்ட பிரிட்டன் அமைச்சர், வீழ்ந்த விமானத் துறை, நியூயார்க்கை சூழும் ஆபத்து

பிரிட்டன் சுகாதாரத் துறை துணை அமைச்சரும், கன்சர்வேடிவ் கட்சி எம்.பியுமான நடீன் டோரிஸிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அவரே தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்து ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய ஐக்கிய ராஜ்ஜியத்தில் 6 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மேலும், 382 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் சுகாதார அமைச்சர் – விரிவான தகவல்கள்

கொரோனா வைரஸ்: மலேசியா, சிங்கப்பூரில் என்ன நிலைமை?

மலேசியாவில் கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் நூறை தாண்டிய பிறகும் வேகம் குறையாமல் தொடர்ந்து தனது தாக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இதுவரை மலேசியாவில் 117 பேர் அக்கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் 18 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.அந்த 18 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாடு சென்று திரும்பியவர், மற்ற 17 பேருக்கு கிருமித் தொற்று ஏற்பட உள்நாட்டுத் தொடர்புகளே காரணமாக இருக்கக் கூடும் என மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: மலேசியா, சிங்கப்பூரில் என்ன நிலைமை?

“கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறியது தமிழகம்” – விஜயபாஸ்கர்

கொரோனா தொற்று இல்லாத மாநிலமாக தமிழகம் உள்ளது என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.”நமது மாநிலத்திற்கு ஒரு நற்செய்தி, ராஜிவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்துவிட்டார். அவர் விரைவாக குணமடைந்ததற்கு காரணம் கவனமான சிகிச்சையும், அவசர காலத்தில் சிறப்பாக செயல்படும் நிபுணத்துவமே காரணம். தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று இல்லை,” என அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விரிவாகப் படிக்க:“கொரோனா வைரஸ் தொற்று இல்லாத மாநிலமாக மாறியது தமிழகம்” – விஜயபாஸ்கர்

மத்தியப்பிரதேச அரசியல் சர்ச்சை: ‘கமல்நாத் ராஜிநாமா செய்யமாட்டார்’ – காங்கிரஸ்

மத்தியப்பிரதேச அரசியலில் நீடித்துவரும் குழப்பம் தற்போது மேலும் தீவிரமாகி உள்ளது.

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியா, கடந்த சில நாள்களாக வீசிய அரசியல் புயலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர்.

விரிவாகப் படிக்க:மத்தியப்பிரதேச அரசியல் சர்ச்சை: ‘கமல்நாத் ராஜிநாமா செய்யமாட்டார்’ – காங்கிரஸ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »