Press "Enter" to skip to content

கொரோனா வைரஸால் டிரம்புக்கு பாதிப்பு இல்லை, அமெரிக்காவிலிருந்து பிரிட்டன் பயணிக்க தடை Corona Latest Updates

கொரோனா வைரஸால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாதிக்கப்படவில்லை என வெள்ளை மாளிகை மருத்துவர் சில மணி நேரங்களுக்கு முன்பு தெரிவித்தார்.

தனக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக நேற்று தெரிவித்து இருந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும் என்று ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்து இருந்தது.

இப்படியான சூழலில் டிரம்புக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.

ஏன் டிரம்புக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கும் நிலை ஏற்பட்டது?

ஒரு வாரத்திற்கு முன்பு பிரேசிலிருந்து வந்த பேராளர்கள் குழு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்பும் பங்கேற்றார். அதில் சிலருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து டிரம்புக்கும் கொரோனா இருக்கலாம் என்ற அச்சம் இருந்தது.

முன்னதாக தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மறுத்த டிரம்ப் பின்னர் கொரோனா பரிசோதனைக்கு ஒப்புக் கொண்டார்.

சரி கொரோனா தொடர்பாக சர்வதேச அளவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம்.

  • அமெரிக்காவில் கொரோனாவால் 54 பேர் பலியாகி உள்ளனர். அங்கு 2,700 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 50 பில்லியன் டாலர்கள் பணத்தை அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ 3.6 லட்சம் கோடி பணத்தை ஒதுக்கீடு செய்தார் டொனால்ட் டிரம்ப்.
  • முன்பு ஐரோப்பாவுக்கு பயணிப்பதற்குத் தடை விதித்து இருந்த அமெரிக்கா, இப்போது அந்த பிரிட்டன் மற்றும் ஐர்லாந்து குடியரசுக்கும் நீடித்துள்ளது.
  • ஆஸ்திரியா, பெஜியம், செக் குடியரசு, டென்மார்க், எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லாட்வியா, சுவீடன், ஸ்பெயின் உள்ளிட்ட 26 ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு முன்னதாக பயணிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது.
  • எங்களைக் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு இது என ஐரோப்பிய ஒன்றியம் டிரம்பை குற்றஞ்சாட்டி இருந்தது.
  • கொரோனா பரிசோதனை முழுவதும் இலவசம் என அறிவித்துள்ளது அமெரிக்கா.
  • கொரோனா வைரஸில் மையப்புள்ளி என உலக சுகாதார நிறுவனத்தால் வர்ணிக்கப்பட்ட ஐரோப்பாவில் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது. இத்தாலிக்கு அடுத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் 191 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர்.
  • இத்தாலியில் இப்போது வரை 1,440 பேர் பலியாகி உள்ளனர். பிரான்ஸில் 91 பேர் பலியாகி உள்ளனர்.
  • பிரிட்டனிலும் நிலைமை மோசமாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பலி எண்ணிக்கை ஏறத்தாழ இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இதுவரை பிரிட்டனில் 21 பேர் மரணித்துள்ளனர்.
  • பிரிட்டனில் இதுவரை 37,746 பேர் கொரோனா பரிசோதனைக்கு உள்ளாகி உள்ளனர். அதில் 1,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சனிக்கிழமை மாலை நிலவரப்படி 238ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சிங்கப்பூரை முந்தியுள்ளது மலேசியா.
  • இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது ஒரே நாளில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இலங்கையில் மார்ச் 13 வரை ஐந்து நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று மாலை நேரம் ஆகும் போது அந்த தொகையானது 10ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »