Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) நெருக்கடி: வேலையிழக்கும் 36000 பிரிட்டிஷ் ஏர்வேஸ் பணியாளர்கள் மற்றும் பிற செய்திகள்

தங்கள் பணியாளர்களில் சுமார் 36,000 ஊழியர்களை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இடைநீக்கம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக விமானங்களை தற்காலிகமாக இயக்காமல் இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், இந்த பணிநீக்கம் தொடர்பாக ஒரு வாரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான கேபின் குழு உறுப்பினர்கள், பொறியாளர்கள், தலைமை அலுவலகத்தில் வேலை பார்க்கும் மற்ற பணியாளர்கள் என 80 சதவீத ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

எனினும், அரசின் கொரோனா வைரஸ் திட்டப்படி, இவர்கள் வாங்கிவந்த 80 சதவீத ஊதியம் இவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸால் கட்டுப்பாடு: ‘மலேசியாவில் ரமலான் கொண்டாட்டம் மக்கள் கையில்தான் உள்ளது’

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்திருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது.

அடுத்து வரும் இரு வாரங்கள்தான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியை தீர்மானிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் இரண்டாம் கட்டமானது, மலேசிய மக்களுக்கு சவாலான, இக்கட்டான காலகட்டமாக இருக்கும் என மலேசிய அரசு மேலும் கூறியுள்ளது.

விரிவாகப் படிக்க:கொரோனாவால் கட்டுப்பாடு: ரமலான் கொண்டாட்டம் மக்கள் கையில்தான் உள்ளது: மலேசிய அரசு

கொரோனா வைராஸால் பிரபலமான தப்லிக் ஜமாத் – வரலாறும் பின்னணியும்

பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் இந்திய முஸ்லிம் மக்களுக்கு தங்களின் அரசியல் மற்றும் மத அடையாளம் ஒடுக்கப்படுவதாக ஒரு பலத்த கருத்து இருந்தது. முஸ்லிம்கள் தங்களின் அரசியல் நலனுக்காக 1906ஆம் ஆண்டு முஸ்லிம் லீக்கை தொடங்கினர்.

மேலும் இரண்டு முஸ்லிம் அமைப்புகளும் தொடங்கப்பட்டன. முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இஸ்லாம் குறித்து போதிக்க மெளலான மௌதுதி தலைமையில் 1941ஆம் ஆண்டு ஜமாத்-இ -இஸ்லாமி அமைப்பு தொடங்கப்பட்டது.

அதற்கு 15 வருடங்களுக்கு முன்பு மற்றொரு முக்கிய இஸ்லாமிய அறிஞரான மெளலானா முகமது இலியாஸ் கந்த்லாவி, 1926ஆம் ஆண்டு இந்தியாவின் மேவாத் பகுதியில் (டெல்லியிலிருந்து சிறிது தூரம்), தப்லிக் ஜமாத் என்னும் அமைப்பை தொடங்கியிருந்தார்.

விரிவாகப் படிக்க:தப்லிக் ஜமாத் – நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள் Combating Coronavirus

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்று, உலகின் பல நாடுகளிலும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் கொரோனா வைரஸ் தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்துக் கொண்டே போக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நூற்றுக்கணக்கில் அதிகரிக்கிறது.

ஏராளமான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு மற்றும் பிற தடைகள் அமலில் உள்ள நிலையில், பல நாடுகளிலும் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் ரத்து செய்யப்படுகின்றன அல்லது ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்

கொரோனா வைரஸ்: சீனாவின் ஓர் உயிரி ஆயுதத் திட்டமா? – இந்தியாவில் பெருகும் சீனாவுக்கு எதிரான உரையாடல்

கொரோனா வைரஸ் சிக்கலை சமாளிப்பதற்காக 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா பொது நடமாட்ட முடக்கத்தை எதிர்கொண்டு வருகிறது.இது முன்னெப்போதும் கண்டிராத அளவுக்கு மிகப்பெரிய முடக்கமாகும்.

இந்நிலையில் உலக அளவில் இந்த கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனா எந்த அளவுக்குக் காரணமாக இருந்தது என்பதைப் பற்றி வல்லுநர்களும் ஊடகங்களும் விவாதிப்பது இந்தியாவில் நடந்து வருகிறது.

இதன் ஊடாக சீனாவுக்கு எதிரான உரையாடல் இந்தியாவில் வளர்ந்து வருகிறது.

விரிவாகப் படிக்க:கொரோனா வைரஸ்: சீனாவின் ஓர் உயிரி ஆயுதத் திட்டமா? – இந்திய விவாதமும், விமர்சனமும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »