Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காலத்திலும் அமேசானில் அதிகரித்த காடழிப்பு நடவடிக்கைகள் மற்றும் பிற செய்திகள்

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக போராடி வரும் நிலையில், பிரேசிலிலுள்ள அமேசான் மழைக்காடுகளில் கடந்த மாதம் பெரியளவில் காடழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது.

அமேசான் காடுகளில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டுவது மற்றும் சுரங்கங்களை தோண்டுவது உள்ளிட்டவற்றை தடுக்கும் வகையில் அப்பகுதியில் ராணுவத்தினரை நிலைநிறுத்தும் திட்டத்தை பிரேசில் அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது, கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் அமேசானில் காடழிப்பு செயல்பாடுகள் 64 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 2020ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் அமேசானில் சட்டவிரோத காடழிப்பு செயல்பாடுகள் 55 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் அதிபர் சாயீர் போல்சனாரூவின் கொள்கைகளும் சொல்லாட்சிகளும் சட்டவிரோத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

எனினும், தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் அவர், அமேசானில் சட்டவிரோத செயல்பாடுகளை தடுப்பதற்காக ஆயுதமேந்திய படைகள் குவிக்கப்படும் என கடந்த வாரம் அறிவித்தார்.

மதுபானக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுபானக் கடைகளை மூட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பல நிபந்தனைகளுடன் மதுக்கடைகளை திறக்கலாம் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது; ஆனால் அந்த நிபந்தனைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்பதால் நேற்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

விரிவாக படிக்க:தமிழகத்தில் ஊரடங்கு முடியும்வரை மதுபானக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு

உருமாறும் கொரோனா வைரஸ்: தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்படுமா?

அமெரிக்கா மற்றும் பிரிட்டனை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 நோயை ஏற்படுத்தும் கொரோனாவைரஸின் நூற்றுக்கணக்கான திடீர்மரபணு மாற்றங்களை (mutation) அடையாளம் கண்டுள்ளனர்.

ஆனால், கொரோனா வைரஸின் இந்த நூற்றுக்கும் அதிகமான திடீர் மரபணு மாற்றங்களுக்கும் அதன் பரவும் தன்மைக்கும், அது தடுப்பூசி கண்டறிவதில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் இதுவரை நிருவப்படவில்லை.

விரிவாக படிக்க:உருமாறும் கொரோனா வைரஸ்: தடுப்பூசி கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்படுமா?

கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டறிவதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இஸ்ரேல் கொரோனாவிற்கான ஆன்டிபாடி மருந்தை கண்டறிந்துவிட்டதாக அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் தலைமை உயிரியல் ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸுக்கான ஆன்டிபாடி மருந்தை வெற்றிகரமாக கண்டறிந்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நஃப்தாலி பேனெட் கூறியுள்ளார்.

விரிவாக படிக்க:கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டறிந்துவிட்டதா இஸ்ரேல்?

ஆல்கஹால் கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையா?

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் கொரோனா வைரஸ் சிக்கலை சமாளிக்கப் போராடி வரும் நிலையில் வைரஸ் தொற்று வராமல் இருக்க, அல்லது தொற்றை குணப்படுத்த ஏராளமான உடல் நல அறிவுரைகள் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றில் பல பயனற்றவை என்ற போதும் தீங்கும் விளைவிக்காதவை. சில அறிவுரைகள் அபாயகரமானவை.

அப்படிப் பரவலாகப் பகிரப்படும் அறிவுரைகள் சிலவற்றையும் அது தொடர்பாக அறிவியல் என்ன சொல்கிறது என்பதையும் இங்கே பார்ப்போம்.

விரிவாக படிக்க:மது அருந்தினால் கொரோனாவிடம் இருந்து தப்ப முடியுமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »