Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): முகக்கவசம் அணிய கூறிய வெள்ளை மாளிகை, அணியாத டொனால்ட் டிரம்ப் – என்ன நடக்கிறது அங்கே?

இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, வெள்ளை மாளிகை ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகை ஊழியர்கள் இருக்கையில் அமரும் நேரத்தைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணியும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்கா துணை அதிபர் மைக் பென்ஸின் உதவியாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை அடுத்தை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது அமெரிக்கா.

ஆனால், ரோஸ் கார்டனில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், முகக்கவசம் அணியாமலே பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் டொனால்ட் டிரம்ப்.

அவர், “நான் அனைவரிடமிருந்தும் விலகியே இருப்பதால் முகக்கவசம் அணிய தேவையில்லை,” என்றார்.

அதுமட்டுமல்லாமல், வெள்ளை மாளிகையில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்று குறித்தும் மிக சாதாரணமாகவே பேசினார்.

அவர், “நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளை மாளிகைக்கு வருகிறார்கள், செல்கிறார்கள்,” என்றார்.

மேலும் அவர், “கொரோனாவை கட்டுப்படுத்த நாம் சிறப்பாகவே செயல்படுகிறோம்,” என்று கூறினார்.

அவர், “ஒருவருக்குதான் கொரோனா. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கெல்லாம் நெகடிவ் ரிப்போர்ட் வந்துள்ளது,” என தெரிவித்தார்.

கொரோனாவை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள முக்கிய பணி குழுவை சேர்ந்த மூன்று பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அதில் மருந்துவர் ஆண்டனி ஃபெசியும் ஒருவர்.

இவர்தான், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் அமெரிக்காவின் முகமாக இருக்கிறார்.

முகக்கவசம் தொடர்பாக டிரம்ப் கூறியது என்ன?

ஏப்ரல் மாதமே முகக்கவசம் குறித்து பேசி உள்ளார் டிரம்ப்.

அப்போது அவர் தாம் முகக்கவசம் அணிய விரும்பவில்லை என்றார்

“நான் பல்வேறு தரப்பினரை வெள்ளை மாளிகையில் சந்திப்பேன். பல்வேறு நாட்டு அதிபர்கள் முதல் அரசிகள் வரை சந்திப்பேன். அப்போது என்னை யாரும் முகக்கவசத்துடன் சந்திப்பதை விரும்பவில்லை,” என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »