Press "Enter" to skip to content

அமெரிக்காவிடம் இருந்து காப்பாற்ற இரானிய எண்ணெய் கப்பல்களுக்கு வெனிசுவேலா பாதுகாப்பு மற்றும் பிற செய்திகள்

இரானில் இருந்து தங்கள் நாட்டுக்கு வரும், இரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுக்காமல் இருப்பதற்கு அக்கப்பல்களுக்கு ராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என வெனிசுவேலா தெரிவித்துள்ளது.

அந்து எண்ணெய் கப்பல்கள், விரைவில் வெனிசுவேலா வரவுள்ளன. இந்த கப்பல்களில் வரும் பெட்ரோல், வெனிசுவேலாவுக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ளது.

வெனிசுவேலா மற்றும் இரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, இரு நாடுகளுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்தைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைப் பரிசீலித்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய, பயன்படுத்தப்படாத எண்ணெய் வளங்களை வெனிசுவேலா வைத்திருந்தாலும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடந்த இரு தசாப்தங்களாக எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எண்ணெய் வளம் இருந்தாலும், பெட்ரோலை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில், எண்ணெய் துறை எவ்வளவு மோசமாகச் செயல்படுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம் என அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்து வரும் வெனிசுவேல எதிர்க்கட்சித் தலைவர் குவான் குவைடோ தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கம் ஏன்?

தி.மு.கவின் துணைப் பொதுச் செயலாளராக இருந்துவந்த வி.பி. துரைசாமி, 1989லிருந்து 1991வரையிலும் 2006லிருந்து 2011வரையிலும் தி.மு.க. சார்பில் தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவராகவும் பொறுப்புகளை வகித்தவர்.

விரிவாகப் படிக்க: தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வி.பி. துரைசாமி நீக்கம் ஏன்?

‘மே 25 முதல் விமானத்தில் பயணிப்போர் தனிமைப்படுத்தமாட்டார்கள்’

இந்தியாவில் மே 25 முதல் உள்ளூர் விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருக்கிறது. இதில் பயணிப்போருக்கான விதிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டன.

விரிவாகப் படிக்க: ‘மே 25 முதல் விமானத்தில் பயணிப்போர் தனிமைப்படுத்தமாட்டார்கள்’ – 10 முக்கிய தகவல்கள் என்ன?

கொரோனா உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் தொற்று இல்லாத குழந்தைகள்

மும்பையில் ஒரு மருத்துவமனையில் 100க்கும் அதிகமான குழந்தைகள், தங்கள் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதும் நல்ல உடல் நலத்துடன் பிறந்துள்ளன.

விரிவாகப் படிக்க: கொரோனா தொற்று உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் தொற்று இல்லாத குழந்தைகள்

“உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய அரசு”

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலைச் சந்தித்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகள் எத்தகையவை, தற்போதைய பிரச்சனைகளுக்கு அவை தீர்வாகுமா என்பதெல்லாம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

பேட்டியிலிருந்து இரண்டாம் பாகம்: “உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய அரசு”: ஜோதி சிவஞானம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »