Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): ஒரே நிறுவனத்தில் 15 ஆயிரம் பேர் வேலையிழப்பு – என்ன நடக்கிறது? மற்றும் பிற செய்திகள்

ஒரே நிறுவனத்தில் 15 ஆயிரம் பேர் வேலையிழப்பு

இரண்டு பில்லியன் யுரோக்கள் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 1.6 லட்சம் கோடி ரூபாய் செலவினை குறைப்பதற்காக 15 ஆயிரம் பேரைப் பணி நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது ரெனால்ட் நிறுவனம்.

அந்த நிறுவனத்தின் இடைக்கால தலைவரான க்ளோடில்டே, இந்த திட்டம் அத்தியாவசியமானது என கூறி உள்ளார். அந்த நிறுவனமானது மின்சார கார், வேன் தயாரிப்பில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறி உள்ளது. இதன் காரணமாக பிரான்ஸில் மட்டும் 4,600 பேர் வேலையிழப்பார்கள். அதுமட்டுமல்லாமல் பிரான்ஸில் ஆறு தொழிற்சாலைகளை மூட திட்டமிட்டு வருவதாகவும் அந்நிறுவனம் கூறி உள்ளது.

ரெனால்ட் நிறுவனத்துடன் கார் உற்பத்தியில் இணைந்து செயல்படும் நிசான் நிறுவனமும் பெரிய அளவில் பணியாளர் குறைப்பினை அறிவித்துள்ளது. கொரோனாவுக்கு முன்பே இந்த நிறுவனங்களின் விற்பனை சரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு இந்திய உள்துறை அமைச்சகத்தின் புதிய விதிமுறைகள்

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியே, அடுத்த ஒரு மாத காலத்துக்கு பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

விரிவாகப் படிக்க:ஊரடங்கு தளர்வு: இந்திய அரசின் புதிய விதிமுறைகள் – 15 தகவல்கள்

ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய எம்.எஸ்.என் வலைத்தளத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் சிலரை வேலையிலிருந்து அனுப்பிவிட்டு அவர்களுக்கு பதிலாக செய்திகளை தேர்ந்தெடுக்க தானாக இயங்கும் அமைப்பை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

எம்.எஸ்.என் வலைதளத்தில் செய்தி நிறுவனங்களின் செய்திகளை தேர்ந்தெடுப்பது, தலைப்புகளை வைப்பது அதற்கேற்ற புகைப்படங்கள் வைப்பது போன்ற வேலைகளை தற்போது பத்திரிகையாளர்கள் செய்து வருகின்றனர்.

விரிவாகப் படிக்க:ரோபோக்களிடம் வேலையைப் பறிகொடுக்கும் பத்திரிகையாளர்கள்

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைய கொரோனா வைரஸ் மட்டுமே காரணமல்ல”

2019-20ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1% ஆக குறைந்துள்ளது. ஆனால், இதற்கு கொரோனா தாக்குதல் மட்டுமே காரணமில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்கள் வெள்ளிக்கிழமையன்று வெளியிடப்பட்டன.

விரிவாகப் படிக்க:“இந்தியாவின் பொருளாதார சரிவுக்கு கொரோனா மட்டுமே காரணமல்ல”

தமிழக அரசுக்கு மருத்துவ வல்லுநர்கள் அளித்துள்ள ஆலோசனை என்ன?

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகம் உள்ளதால், அந்த நான்கு மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் என தமிழக அரசின் மருத்துவ ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

மே 31ம் தேதியுடன் நான்காம் கட்ட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊரடங்கு முடிவுக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீடிக்கவேண்டுமா இல்லையா என்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடத்தினார்.

விரிவாகப் படிக்க:ஊரடங்கு தளர்வு: தமிழக அரசுக்கு வல்லுநர்கள் அளித்துள்ள ஆலோசனை என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »