Press "Enter" to skip to content

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவுக்கு ஃபேஸ்புக்கில் எதிர்ப்பு மற்றும் பிற செய்திகள்

அமெரிக்க அதிபரின் வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ள ஃபேஸ்புக் பதவிக்கு நீக்கப்படாமல் இருப்பது ‘வெட்கக்கேடானது’ என்று அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் கூறியுள்ளனர்.

காவல்துறையின் பிடியில் இருந்தபோது உயிரிழந்த கருப்பின அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிரான போராட்டம் குறித்து பதிவிட்டிருந்த டொனல்டு டிரம்ப், ‘போராட்டங்களின்போது சூறையாடல் தொடங்கினால், சுடப்படுவதும் தொடங்கும்,’ என்று பதிவிட்டிருந்தார்.

இப்பதிவு வன்முறையைத் தூண்டும் விதத்தில் உள்ளதாகக் கூறும் எச்சரிக்கை வாசகங்களைக் கொண்டு அந்த பதிவை ட்விட்டர் மறைத்துள்ளது. எனினும், அப்பதிவு இன்னும் ட்விட்டரால் நீக்கப்படவில்லை.

டிரம்ப் பதிவில் உள்ள கருத்துகள் தங்கள் நிறுவனத்தின் சமூக ஒழுங்கு விதிகளை மீறவில்லை என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க் கூறியுள்ளார்.

தங்கள் ஊழியர்கள் சிலர் அனுபவிக்கும் வலியை தங்களால் உணர முடிகிறது என்றும், நிறுவனத்துடன் தாங்கள் கருத்து வேறுபடும் விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகப் பேச அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்தியா vs சீனா: ராணுவத்தில் யார் பலசாலி?

இந்தியா சீனா இடையிலான எல்லை பதற்றம் என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகவே இருந்து வருகிறது. எப்போது எல்லை பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் இரு அண்டை நாடுகள் பற்றிய ஒப்பீடு அதிகம் விவாதிக்கப்படுகிறது.

விரிவாகப் படிக்க: இந்தியா vs சீனா: ராணுவத்தில் யார் பலசாலி? – 3 முக்கிய தகவல்கள்

நரேந்திர மோதி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் சேரவில்லை என மறுப்பு

பிரதமர் நரேந்திர மோதியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் இடம்பெற்ற மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன், தான் பா.ஜ.கவில் சேர்ந்ததாகச் சொல்லப்படுவதை மறுக்கிறார்.

விரிவாகப் படிக்க: “நான் பா.ஜ.கவில் சேர்ந்தேனா?”: மதுரை சலூன் கடைக்காரர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?

தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள 1,162 பேரில் 964 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

ஆகவே சென்னையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 15,770ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,495ஆக உயர்ந்திருக்கிறது.

விரிவாகப் படிக்க: சென்னையில் ஒரே நாளில் 964 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

‘உங்கள் மாமனார் நலமடைந்து வருகிறார்’: இறந்தவரின் குடும்பத்திடம் மருத்துவமனை

பிஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரின் மருமகன் நிலேஷ் நிக்டேவிடம் ஒரு ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து பெறப்பட்டது. அந்த ஒப்புதல் கடிதத்தில் நோயாளிக்கு ஏதாவது ஏற்பட்டால், அதற்கு மருத்துவமனை பொறுப்பேற்காது என குறிப்பிடப்பட்டிருந்தது.

விரிவாகப் படிக்க: ‘உங்கள் மாமனார் நலமடைந்து வருகிறார்’: இறந்தவரின் குடும்பத்திடம் கூறிய மருத்துவமனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »