Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு; இதுவரை இல்லாத அளவு அதிகரிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.

இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இன்று காலை 8 மணி நிலவரப்படி, இந்தியா முழுவதும் 1,98,706 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் குணமடைந்தவர்கள் 95,526. தொற்று உண்டானபின் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 5,598 ஆக உள்ளது.

நாடு முழுவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 97,581 ஆகும்.

புதிதாக இந்தியாவில் 8,392 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதான் ஒரே நாளில் கோவிட்-19 தொற்று எண்ணிகையில் உண்டான அதிகபட்ச உயர்வாகும்.

70,013 பேருக்கு கோவிட்-19 உண்டாகியுள்ள மகாராஷ்ரா மாநிலம் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.

அதற்கு அடுத்த இடங்களில் தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

மேற்கண்ட எட்டு மாநிலங்களில் மட்டும் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 90% பேர் உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனை எத்தனை?

இந்தியா முழுவதும் இதுவரை 39,66,075 முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவிக்கிறது.

சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பதால் பரிசோதனை செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இதைவிடக் குறைவாகவே இருக்கும்.

கோவிட்-19: உலக அளவிலான எண்ணிக்கை எவ்வளவு?

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62 லட்சத்தை 66 ஆயிரத்தை கடந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 நோய்த்தொற்றால் உலக அளவில் இதுவரை 3 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 27 லட்சம் மேற்பட்டவர்கள் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

உலக நாடுகளின் பாதிப்பு, மரணம் மற்றும் குணமடைந்தோர் எண்ணிக்கையை கீழ்க்கண்ட பிபிசியின் சிறப்புப் பக்கத்தில் தெரிந்துகொள்ளலாம்.

உலக அளவில் 10,000க்கும் அதிகமான உயிழப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் இன்று மெக்சிகோவின் சேர்ந்துள்ளது. அங்கி இதுவரை 10,167 பேர் இறந்துள்ளனர்.

கொரோனாவால்அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள்

  • அமெரிக்கா: பாதிப்பு – 18,11,357 பேர்
  • பிரேசில்: பாதிப்பு – 5,26,447 பேர்
  • ரஷ்யா: பாதிப்பு – 4,14,328
  • பிரிட்டன்: பாதிப்பு – 2,77,736
  • ஸ்பெயின்: பாதிப்பு – 2,39,638

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »