Press "Enter" to skip to content

கொரோனா வைரசுக்கு தடுப்பூசி போடுவதாக சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி தனது மூன்று இளம் மகள்களுக்கும் பெண்ணுறுப்பு சிதைப்பு சடங்கு செய்த தந்தை ஒருவர் எகிப்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறுமிகளின் தந்தையிடம் இருந்து பிரிந்து வாழும், அவர்களின் தாய் அளித்த புகாரின்பேரில் இந்தக் கைதுகள் நடந்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று தாக்காமல் இருக்க தடுப்பூசி செலுத்தப்படுவதாகக் கூறி, அந்த சிறுமிகளுக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு, இந்த சடங்கு செய்யப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எகிப்தில், சிறுமிகளுக்கு பெண்ணுறுப்பு சிதைப்பு செய்வது 2008 முதல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த சடங்குக்கு சிறுமிகள் உட்படுத்தப்படுவது தொடர்ந்து வருகிறது.

பெண்ணுறுப்பு சிதைப்பால் பெண்களுக்கு சிறுநீர் குழாயில் தொற்று, கருப்பை மற்றும் அதை சார்ந்த உறுப்புகளில் தொற்று, சிறு நீரகத் தொற்று, நீர்க்கட்டிகள், கருத்தரிப்பில் பிரச்சனை மற்றும் உடலுறவின்போது வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

பெண்களின் கண்ணியம் மற்றும் அவர்களின் எதிர்கால திருமணத்திற்காக இவ்வாறு செய்ய வேண்டும் என்ற கலாசார மூட நம்பிக்கையினால் பெண்ணுறுப்பு சிதைப்பு நடந்து வருகிறது.

ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யுனிசெஃப்பின் தகவலின்படி ஆஃப்ரிக்கா மற்றும் அரபு பிராந்தியத்தில் உள்ள 31 நாடுகளில் இப்பழக்கம் உள்ளது. அவற்றில் குறைந்தது 24 நாடுகளில் இதற்கு எதிரான சட்டமும் உள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினம் – ஜூன் 5

இன்று உலக சுற்றுச்சூழல் தினம். 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

விரிவாகப் படிக்க: உலக சுற்றுச்சூழல் தினம்: புவியின் காதலர்களுக்கு சில முக்கியத் தகவல்கள்

சந்திர கிரகணம்: எங்கு, எப்போது, எப்படி காணலாம்?

இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம், ஜூன் 5ஆம் தேதி மற்றும் ஜூன் 6ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் நிகழவுள்ளது.

விரிவாகப் படிக்க: சந்திர கிரகணம்: எங்கு, எப்போது, எப்படி காணலாம்?

சீன அரசுக்கு பின்னடைவு

மத்திய சீனாவில், கொரோனா தொற்றியவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் மரணம் அடைந்ததை அடுத்து, கொரோனா விவகாரத்தை அரசு சரியாக கையாளவில்லை என மக்களுக்குத் தோன்றிய எண்ணம், அரசுக்கு பின்னடைவைத் தந்துள்ளது.

விரிவாகப் படிக்க: கொரோனாவுக்கு எதிராகப் போராடிய இன்னொரு முக்கிய சீன மருத்துவர் மரணம்

தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,072 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விரிவாகப் படிக்க: தமிழகத்தில் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »