Press "Enter" to skip to content

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற சீன உதவியை நாடினேனா? – டிரம்ப் பதில்

வணிக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்ததால் சீனாவின் வீகர் முஸ்லிம்கள் நன்னடத்தை முகாம்களில் அடைக்கப்பட்ட விவகாரத்தில் சீன அதிகாரிகளுக்கு மேற்கொண்டு புதிய தடை எதையும் விதிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

பிரச்சனையில் சீன அதிகாரிகளுக்கு மேற்கொண்டு எந்த தடையும் விதிக்கப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் அமைக்ப்பட்டுள்ள பிரும்மாண்டமான நன்னடத்தை முகாம்களில் சுமார் 10 லட்சம் வீகர் முஸ்லிம்களும், பிற சிறுபான்மை இனத்தவரும் அடைத்துவைக்கப்பட்டு, பலவந்தமாக அவர்கள் வாழ்க்கை முறை மாற்றப்படுகிறது.

அவர்களுக்கு அங்கு எந்த தண்டனையும் வழங்கப்படவில்லை என்று கூறும் சீனா, அவர்ளை நல்வழிப்படுத்துவதாகக் கூறுகிறது. ஆனால், இது குறித்து சர்வதேச சமூகங்கள் சந்தேகம் எழுப்புகின்றன.

இந்நிலையில், டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து பதவி விலகிய ஜான் போல்டன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில், ஜின்ஜியாங் மாகாண நன்னடத்தை முகாம்கள் அமைப்பது சரியான செயல் என்று ஒரு உச்சிமாநாட்டில் ஷி ஜின்பிங்குக்கு டிரம்ப் நற்சான்றிதழ் வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் விவகாரத்தின் ஆரம்பப்புள்ளி.

இந்த நிலையில், ஆக்சியாஸ் செய்தி தளத்திற்கு அளித்த நேர்காணலில், “மிகப்ப பெரிய வணிகப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தது. இந்த நிலையில் நாம் மேற்கொண்டு தடைகளை விதித்துக் கொண்டே போக முடியாது. ஏற்கெனவே நான் இறக்குமதி வரியை உயர்த்திவிட்டேன். தடை விதிப்பதைவிட இந்த நடவடிக்கை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது,” என கூறி உள்ளார்.

அமெரிக்க விவசாய விளைபொருள்களை வாங்கி, அடுத்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற உதவும்படி சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் கேட்டீர்களா என்ற கேள்விக்கு, “இல்லவே இல்லை. சீன அதிபரிடம் மட்டும் அல்ல. நான் நம் நாட்டுடன் வணிகம் செய்ய சொல்லி அனைவரிடமும் கேட்கிறேன். நம் நாட்டுக்கு எது நல்லதோ அதுதான் எனக்கும் நல்லது,” என்று கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் 2710 பேருக்கு புதிதாக கொரோனா; நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 37 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 62,087ஆக உயர்ந்துள்ளது.

மாநில சுகாதாரத் துறை அளித்துள்ள தகவல்களின்படி, இன்று அடையாளம் காணப்பட்ட 2710 பேரில் 2,652 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். 6 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். மீதமிருப்பவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள். குறிப்பாக டெல்லியில் இருந்து வந்தவர்களில் 8 பேருக்கும் கர்நாடகத்தில் இருந்து வந்தவர்களில் 10 பேருக்கும் இன்று நோய்த் தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே, சென்னைத் தவிர்த்த பிற மாவட்டங்களிலும் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

விரிவாகப் படிக்க:தமிழ்நாட்டில் 2710 பேருக்கு புதிதாக கொரோனா; நோயாளிகளுக்கு ரெம்டிசிவிர் மருந்து

“ஒரே இரவில் 2000 – 3000 படையினரை கொலை செய்தேன்” – கருணா பேச்சு

தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) வெளியிட்ட கருத்து தற்போது இலங்கையில் பாரிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

ஆணையிறவு பகுதியில் தான் 2000 முதல் 3000 வரையான இலங்கை இராணுவத்தினரை ஒரே இரவில் கொலை செய்ததாக விநாயகமூர்த்தி முரளிதரன் அண்மையில் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.

அம்பாறை – நாவிதன்வெளி பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றிலேயே அவர் இந்த கருத்தை கூறியிருந்தார்

விரிவாகப் படிக்க:

கொரோனா வைரஸ்: தென் கொரியாவை அச்சுறுத்தும் இரண்டாம் அலை நோய்த்தொற்று

தென் கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் இருந்து வந்தாலும், கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக தென் கொரியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.

கோவிட்-19 நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது அதை திறம்பட எதிர்கொண்டதாக தென் கொரியா பாராட்டப்பட்டது. ஆனால், தற்போது கொரோனா வைரஸின் பரவல் அடுத்து வரும் மாதங்களிலும் தொடருமென்று அந்த நாட்டு அரசு கருதுகிறது.

கொரோனா வைரஸின் முதல் அலை ஏப்ரல் வரை நீடித்ததாக கொரிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் (கேசிடிசி) தலைவரான ஜங் யூன்-கியோங் தெரிவித்தார்.

விரிவாகப் படிக்க:கருணா அம்மான் : “ஒரே இரவில் 2000 – 3000 படையினரை கொலை செய்தேன்’’

கான்பூரில் அரசு சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு கொரோனா – 7 பேர் கர்ப்பம்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கான்பூரில் உள்ள அரசு பெண் குழந்தைகள் காப்பகத்தில் வாழும் 57 சிறுமிகளுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் காப்பகத்தில் இருக்கும் 7 பேர் கருவுற்றிருக்கிறார்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் காப்பக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

விரிவாகப் படிக்க:கான்பூரில் அரசு சிறுமிகள் காப்பகத்தில் 57 பேருக்கு கொரோனா – 7 பேர் கர்ப்பம்

மதுரையில் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

மதுரையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், ஜூன் 23ஆம் தேதி முதல் மதுரை நகரத்திலும் அதனை ஒட்டியுள்ள பேரூராட்சிப் பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மதுரை நகரில் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், தமிழக அரசு மதுரை நகரிலும் அதனை ஒட்டியுள்ள பரவை உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளிலும் முழு ஊரடங்கை அறிவித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

விரிவாகப் படிக்க: மதுரையில் 23ஆம் தேதி முதல் ஊரடங்கு: எதற்கெல்லாம் அனுமதி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »