Press "Enter" to skip to content

Fari and lovely பெயர் மாற்றம் – சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

கீதா பாண்டே
பிபிசி செய்தியாளர்

யூனிலீவர் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் `முகப் பொலிவு` க்ரீமான `ஃபேர் அண்ட் லவ்லி`யில் உள்ள ஃபேர் என்ற வார்த்தை நீக்கப்படும் என அந்நிறுவனம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த அறிவுப்பைப் பலர் வரவேற்றாலும், ஆர்வலர்கள் இது பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது என்கின்றனர்.

`வெள்ளையாக இருப்பதே அழகு` என்றும் இதனால் நிறம் குறைவாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பற்றத்தன்மையுடன் உணருவதற்கும் இந்த ஃபேர் அண்ட லவ்லி க்ரீம் துணை புரிகிறது என யூனிலீவர் மற்றும் அதன் இந்தியத் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடட் மீது ஏற்கனவே பலர் கடுமையான விமர்சனங்கள்

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜியார்ஜ் ஃபிலாய்ட் மரணத்தைத் தொடர்ந்து உலகெங்கும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெற்றன. இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் பிரபலமான தங்களின் இரு க்ரீம்களை தயாரிக்கவோ அல்லது விற்கவோ போவதில்லை எனத் தெரிவித்தது.

“எங்களின் சில விற்பனை பொருட்களின் பெயர்களும், அதுகுறித்த கூற்றுகளும் உங்களின் நிஜமான நிறத்தைக் காட்டிலும் வெள்ளை நிறமே சிறந்தது என்று கூறுவதாகப் போல உள்ளது என கடந்த சில வாரங்களாக விமர்சனங்கள் எழுகின்றன. இது எங்களின் நோக்கம் அல்ல. – ஆரோக்கியமான சருமமே அழகான சருமம்,” என ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தியாவில் ஃபேர் அண்ட் லல்வி `முகத்தின் கறுமையைக் குறைக்கும்` க்ரீம்களில் அதிகம் விற்பனையாகிறது. இதன் ஆண்டு லாபம் 24பில்லியம் ரூபாய் ஆகும்.

அதிக தகவலைப்பார்க்க ஸ்க்ரோல் செய்யவும்

முழுமையாக பார்க்க ப்ரௌசரை அப்டேட் செய்யுங்கள்

தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. ஆனால் நாட்டின் தற்போதைய மொத்த எண்ணிக்கையில் தெரியாமல் இருக்கலாம்

**புதிய தொற்றுகளுக்கான முந்தைய தரவுகள் 3 நாட்களின் சராசரி. எண்ணிக்கை தொடர்ந்து புதுப்பிக்கப்படுவதால், தற்போதைய தேதிக்கான சராசரியை கணக்கிட இயலவில்லை.

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவேற்றியது : 26 ஜூன், 2020, பிற்பகல் 2:04 IST

ஃபேர் அண்ட் லல்வி நிறுவனம் முதன்முதலில் 1970ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த காலத்திலிருந்து பதின் வயது மற்றும் இளம் பெண்கள், வெள்ளையாக இருப்பது என கருதப்படுவதால் மில்லியன் கணக்கான ட்யூப்களை வாங்கியுள்ளனர்.

வெள்ளையாக இருந்தால் உங்களுக்கு காதல்த் துணை கிடைக்கும் அல்லது ஒரு வசீகரமான ஒரு வேலை கிடைக்கும் என கூறும் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரங்களில் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

வியாழனன்று காலை ஃபேர் அண்ட் லவ்லி டிவிட்டரில் இந்திய அளவில் டிரண்டானது. பல ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்தையும் அதன் விற்பனையையும் தடை செய்ய வேண்டும் என கோரினர்.

இந்த க்ரீமை ஆசிய சந்தைகள் மற்றும் மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆசியக் கடைகளில் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என கடந்த இரண்டு வாரங்களாக, சர்வதேச அளவில் குறைந்தது மூன்று change.org மனுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வியாழனன்று, இந்த கீரிமிற்கான புதிய பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அது ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருக்கிறது என்று தெரிவித்தது.

மேலும் ”ஃபேர், ஒயிட் மற்றும் லைட் என்ற வார்த்தைகளை அழகு என்ற வார்த்தையுடன் அடையாளப்படுத்தியது தவறு என யூனிலீவர் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அட்டைப்பெட்டியில் தோலின் நிறத்தின் அளவைக் குறிக்கும் அளவுகோல், மற்றும் விளம்பரங்களில் கிரீமை பயன்படுத்துவதற்கு முன்,பின் ஒப்பீடு என கடந்த சில வருடங்களில், ஏற்கனவே சில மாற்றங்களை நிகழ்த்தியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்காலங்களில், பல நிறங்களில் உள்ள பெண்கள், இந்தியா மற்றும் பல நாடுகளில் உள்ள அழகை குறிக்கும் வகையில் விளம்பரங்கள் இருக்கும் என அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.

தொடரும் விமர்சனங்கள்

யூனிலீவரின் இந்த முடிவை பலரும் வரவேற்றாலும், பெயர் மாற்றம்பெற்றாலும் க்ரீம்களின் விற்பனையில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

”இது உண்மையில் மாற்றத்திற்கு வழி வகுக்கும் ஒரு நல்ல முடிவு தான் ஆனால் இது எங்கள் நோக்கம் நிறைவேறுவதற்கான முதல் படி மட்டுமே,” என இதற்கான கோரிக்கையை எழுப்பிய ஆர்வலர்களில் ஒருவரான சந்தனா ஹிரன் பிபிசியிடம் தெரிவித்தார்.

அவர்கள் தங்கள் தயாரிப்பை விற்கப்போகும் விளம்பரத்தை தான் மாற்றியுள்ளனர் ஆனால் அதே தயாரிப்பு தான்.

எனவே ஒரு கிரீமை எப்படி அழைக்கிறோம் என்பது முக்கியமல்ல.

மேலும் நூற்றாண்டு காலமாக அழைத்து வந்த பெயரை மாற்றினால், தங்கள் சரும நிறம் குறித்து மக்களின் மனநிலையும் புரிதலும் மாறிவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிறவெறிக்கு எதிராக பிரசாரம் செய்யுமாறு பல பாலிவுட் நடிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பல படித்த பெண்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் இந்த பிரசாரங்கள் மிக குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன. இதன் பிறகும் தொடர்ந்து கிரீம்களின் விற்பனை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »