Press "Enter" to skip to content

கோழிக்கறி சவர்மா: சலுகை விலையில் கோழிக்கறி சாப்பிட்ட 800 பேருக்கு உடல் நலக்கோளாறு

பட மூலாதாரம், Getty Images

மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில் கெட்டுப்போன இறைச்சியை உட்கொண்ட 800க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஐந்து வயது சிறுவன் ஒருவனும் உயிரிழந்துள்ளான்.

ஜோர்டானில் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை நிலவி வரும் சூழலில் குளிர்சாதன வசதியில் இறைச்சியை பாதுகாக்காமல், அதை சவர்மா செய்ய பயன்படுத்தியதே உணவு நஞ்சாக மாறக் காரணம் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜோர்டான் தலைநகர் அம்மானின் உள்ள உணவகம் ஒன்றில் வழக்கமான விலையைவிட பாதி விலையில் ‘சிக்கன் சவர்மா’ விற்கப்படும் என்று உணவகம் ஒன்று சலுகையை அறிவித்துள்ளது.

சிக்கன் சவர்மா

பட மூலாதாரம், Getty Images

அதன் காரணமாக அங்கு வழக்கமாக உணவு வாங்க வருவோரின் எண்ணிக்கை விட இரண்டு மடங்கு பேர் இறைச்சி உணவை வாங்கி உள்ளனர்.

ஆனால் கெட்டுப்போன இறைச்சி உணவு செய்ய பயன்படுத்தப்பட்டதால் அவர்களில் 826 பேருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை மருத்துவர்களால் காப்பாற்ற இயலவில்லை என்று பெட்ரா செய்தி முகமை தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த உணவகம் பயன்படுத்திய இறைச்சியில் பாக்டீரியா இருந்ததாக ஆய்வக சோதனைகள் கூறுகின்றன என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த உணவகத்தின் உரிமையாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Presentational grey line

பஞ்சாபில் போலி மதுபானம் குடித்து 38 பேர் பலி

பஞ்சாப்

பட மூலாதாரம், GURPREET CHAWLA / BBC

பஞ்சாபில் போலி மதுபானம் குடித்து 38 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, அமிர்தசரஸின் ஊரக பகுதிகளில் பத்து பேரும், படாலாவில் ஒன்பது பேரும், தர்ன் தரனில் 19 பேரும் போலி மது அருந்தியதால் இறந்தனர். போலி மதுபான பயன்பாடு பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா கூறினார். இதற்கிடையில் ஆந்திர மாநிலத்தில் சானிடைசர் குடித்து 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன என மது கிடைக்காததால் சானிடைசரை குடித்துள்ளனர்

Presentational grey line

குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை

குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை

பட மூலாதாரம், Getty Images

குவைத் அரசு இந்தியர்கள் தங்கள் நாட்டில் நுழைய தடை விதித்துள்ளது. குவைத்தில் சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குவைத் அரசாங்கம் அதனை ஆகஸ்டு ஒன்றாம் தேதியன்று மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது.

Presentational grey line

அதிகரித்த இந்தியாவின் வருவாய் பற்றாக்குறை

அதிகரித்த இந்தியாவின் வருவாய் பற்றாக்குறை

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இந்தியாவின் பொருளாதாரம் சார்ந்த கவலைகளை மேலும் அதிகரித்துள்ளது.

ஜூன் வரையிலான கடந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் வருவாய் பற்றாக்குறை 88.52 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

Presentational grey line

கொரோனாவுடன் நடக்கும் அரசியல் போர்

கொரோனாவுடன் நடக்கும் அரசியல் போர்

பட மூலாதாரம், Getty Images

மார்ச் மாதம் இலங்கையின் 8வது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலுக்கு மத்தியில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேசிய அளவில் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த இலங்கை தயாராகி வருகிறது.

இலங்கையின் மொத்தமுள்ள 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் சுமார் 1.6 கோடி மக்கள் மூலம் இந்தத் தேர்தலில் தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 29 பேர் கட்சிகளின் வாக்கு விகிதத்துக்கு ஏற்ப நியமனம் செய்யப்படுவார்கள்.

Presentational grey line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »