Press "Enter" to skip to content

நாசா & ஸ்பேஸ் எக்ஸ்: பூமிக்கு திரும்பிய வீரர்கள்; விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைல்கல்

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விண்வெளி ஓடத்தில், முதல் முறையாக விண்வெளிக்கு பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக மெக்சிகோ வளைகுடாவின் கடல் பகுதியில் தரை இறங்கியுள்ளனர்.

‘ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் கேப்ஸ்யூள்’ என்ற விண்வெளி ஓடம் மூலம் அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் விண்ணிற்கு இரண்டு மாத பயணம் மேற்கொண்டனர். இருவரையும் விண்வெளி வாகனத்தில் இருந்து பத்திரமாக பூமியில் தரை இறக்க மீட்பு கப்பல் அனுப்பப்பட்டது. இருவரும் ஃபோலோரிடா வளைகுடா கடற்பகுதியில் உள்ள மெக்சிக்கோ வளைகுடாவில் பாதுகாப்பாக தரை இறங்கியுள்ளனர்.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »