Press "Enter" to skip to content

BBC Tamil News: பிபிசி தமிழில் வெளியான சில முக்கியச் செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழில் வெளியான சில முக்கியச் செய்திகள்: அங்கொட லொக்கா: கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன்

பட மூலாதாரம், Getty Images

ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். கோயிலின் அடித்தளத்தில் வெள்ளியால் செய்யப்பட்ட ஐந்து செங்கற்களை வெறும் 32 வினாடிகளில் வைக்க வேண்டும்.

இந்தச் சடங்கின் தேதி மற்றும் நேரம் குறித்து நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இந்த நிகழ்வுக்கான நேரத்தைக் குறித்த, மிகச் சிறந்த ஜோதிட வல்லுநராகக் கருதப்படும் ஆச்சார்யா கணேஸ்வர் ராஜ் ராஜேஸ்வர் சாஸ்திரி திராவிட், காஷியின் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.விரிவாகப் படிக்க:சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பின் காஷ்மீரி பண்டிட்கள் நிலை என்ன?

ஜம்மு - காஷ்மீர்

பட மூலாதாரம், Getty Images

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை மத்திய அரசு 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்து மாநிலத்தை மறுசீரமைத்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.

அந்த நாளிலிருந்து, இங்கு வசித்து வந்த, இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் மீண்டும் தங்கள் மண்ணுக்குத் திரும்பும் கனவைக் காணத் தொடங்கினர். அவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கின் வாசல் வரை வந்து, ஜன்னல் வழியாகத் தங்கள் கனவின் மூலம் காஷ்மீரைப் பார்ப்பதாகவும் எண்ணத் தொடங்கினர்.

ஆனால் இப்போது ஒரு வருட காலத்திற்குப் பிறகு, தாங்கள் ஏமாந்துவிட்டதாகவே உணர்கிறார்கள். அவர்கள் இப்போது ஒரே ஜன்னலுக்கு அருகில் நின்று கனவு மட்டுமே காண்பதாக உணரத் தொடங்கியுள்ளனர், தங்களின் நீண்ட நாள் கனவு நனவாவது நடவாத காரியம் என்று நம்பிக்கை இழக்கத் தொடங்கியுள்ளனர். ஏன்?

விரிவாகப் படிக்க:

கொரோனா இறப்புகள்: உண்மையை மறைக்கிறதா இரான்?

கொரோனா வைரஸ் தொற்று இறப்புகள்: உண்மையை மறைத்ததா இரான்?

பட மூலாதாரம், Getty Images

இரான் அரசு வெளியிட்ட தரவுகளை விட அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என பிபிசி பாரசீக மொழி சேவை நடத்திய புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இரான் அரசைப் பொறுத்தவரை, ஜூலை 20ம் தேதி வரை 42,000 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். ஆனால் அந்நாட்டு சுகாதார துறை 14,405 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறுகிறது.விரிவாகப் படிக்க:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »