Press "Enter" to skip to content

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

  • செர்மைன் லீ
  • பிபிசி

பட மூலாதாரம், Getty Images

நம்முடைய உறவு மேலும் நீடிக்காது என்று ஜியார்ஜிடம் யேன்ஸ் கூறியபோது, அவளுடைய கன்னத்தில் கண்ணீர் வடிந்தது. ஹாங்காங்கை சேர்ந்த 28 வயது அந்த பெண், நிம்மதிப்பெருமூச்சுடன் வீடு நோக்கி உடைந்த்க இதயத்துடன் மெதுவாக நடந்தாள்.

இரண்டு மாதங்களில் இருவரும் பிரிவது இது மூன்றாவது முறை. இந்த முறை அதில் இருந்து பின்வாங்குவதில்லை என்று யேன்ஸ் கூறினாள்.

நான் அவனை மிகவும் மிஸ் செய்கிறேன் மேலும் தொடர்ச்சியாக எங்களுடைய மகிழ்ச்சியான நினைவுகளை அசைபோடுகிறேன் என்று யேன்ஸ் தங்களுடைய முந்தைய ப்ரேக் அப்களை பற்றி சொல்கிறார். தங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களுக்கான ஏக்கம் விரைவில் அவளைச் சிறப்பானவளாக்கியது “அதனால் நான் மீண்டும் மீண்டும் சென்றேன். ஆனால் தொடங்கும் போதே எங்களின் மனநிலைகள் மிகவும் வேறுபட்டவை, அது மாறவில்லை. எனது எல்லா சமூக ஊடகங்களிலும் அவனை பற்றி நான் நீக்கிவிட்டேன், நாங்கள் ஒன்றாக இருக்கும் கடைசி நேரம் இது தான் என்று எனக்குத் தெரியும். “

ஒரு பழைய உறவை மீண்டும் துளிர்க்க செய்வதற்கான விருப்பம் நம் வாழ்நாளில் மிகவும் பொதுவானதாகும். கல்லூரி மாணவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் மீண்டும் முடிந்துபோன உறவுகளை அவ்வப்போது வைத்திருக்கிறார்கள், பாதி பேர் பிரிந்த பின்னரும் பாலியல் உறவைத் தொடருவார்கள்.

உறுதி எடுத்துக்கொண்ட பின்னரும், அவ்வப்போதான உறவுகள் தொடர்கிறது. இணைந்த தம்பதிகளில் மூன்றில் ஒரு பங்கினர், திருமணமான தம்பதிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் தங்களது தற்போதைய உறவில் முறிவு மற்றும் புதுப்பிப்பை அனுபவித்திருக்கிறார்கள்.

எண்ணற்ற பாடல்கள், நாவல்கள், நாடகங்கள், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்படங்களில் காணப்படும் ஒரு உணர்வு – பிரிந்து பின்னர் மன்னிப்பு கோருவது. இது ஆச்சரியப்படத்தக்க வகையில் நம் உளவியலில் வேரூன்றியுள்ளது. ஆனால் தோல்வியுற்ற ஒரு உறவை நாம் ஏன் மறுபரிசீலனை செய்பவர்களாக உள்ளோம்?

கின்சி இன்ஸ்டிடியூட்டின் நரம்பியல் நிபுணரான ஹெலன் ஃபிஷர், கூறுகையில், உறவு முறிவு முதலில் நிகழும்போது ஒரு “எதிர்ப்பு” கட்டத்தை அடைகின்றனர். இதன் மூலம் மக்கள், அந்த நேரத்தில் நிராகரிக்கப்பட்ட நபர், விட்டு விலகிய நபரை வென்றெடுப்பதில் வெறி கொள்கிறார்.

ஃபிஷர் மற்றும் விஞ்ஞானிகள் குழு சமீபத்தில், அன்பானவர்களால் நிராகரிக்கப்பட்ட 15 பேரின் மூளையை ஃபங்ஷனல் மேக்னடிக் ரெசனான்ஸ் இமேஜிங் (எஃப்எம்ஆர்ஐ) பயன்படுத்தி ஸ்கேன் செய்தது.. அவர்களின் முன்னாள் காதலி அல்லது காதலரின் உருவத்தைப் பார்க்கும்படி அவர்களிடம் கூறப்பட்டபோது, அவர்களின் மூளையில் இழப்பு ஏங்குதல் மற்றும் உணர்ச்சி ஒழுங்குமுறை ஆகியவற்றுடன் தொடர்புடைய பகுதிகள் செயல்பட்டன, இது காதல் மற்றும் அன்புக்கான மூளையின் பகுதிகளாகும்.

இந்த நேரத்தில், நிராகரிக்கப்பட்ட காதலர்களுக்கு உயர்ந்த அளவிலான டோபமைன் மற்றும் நியூரோட்ரான்ஸ்மிட்டர் நோர்பைன்ப்ரைனை அனுபவிக்கின்றனர், இது மன அழுத்த நிலைகளை உயர்த்துவதற்கும், உதவி கோருவதற்கான ஆசையை கொண்டுள்ளது என்று பிஷர் கூறுகிறார். இதனை “விரக்தி ஈர்ப்பு” என்று கூறுகிறார். அதனால்தான், அதிக உணர்ச்சிகளின் போது ஒன்றுடன் மீண்டும் ஒன்றிணைவதற்காக பல வியத்தகு சைகைகளை வெறுக்கப்பட்டவர்கள் செய்கிறார்கள்.

நிராகரிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரிடமும் நியூக்ளியஸ் அக்யூம்பன்ஸ் ஆக்டிவ்வாக உள்ளது. இது போதைப்பொருளுடன் தொடர்புடைய ஒரு முக்கிய மூளைப் பகுதியாகும். ஃபிஷர்ஸ் ஆய்வில் பங்கேற்றவர்கள் தங்களை நிராகரித்தவர்களை பற்றி “வெறித்தனமாக” சிந்தித்து, அவருடன் உணர்ச்சி ரீதியான ஒற்றுமையை விரும்பினர்.

“பிரிதல் என்பது ஒரு நாய்க்குட்டியை அதன் தாயிடமிருந்து எடுத்து சமையலறையில் தனியாக வைப்பது போன்றது: அது சுற்றி சுற்றி ஓடுகிறது, குரைக்கின்றது, புலம்புகின்றது. ” என்று ஃபிஷர் மேலும் கூறுகிறார். “பல முறை பிரிந்து மீண்டும் ஒன்று சேரும் தம்பதிகள் இன்னமும் ஒருவருக்கொருவர் வேதியியல் ரீதியாக அடிமையாகிறார்கள். எனவே அந்த [போதை] தீரும் வரை அவர்களால் சுத்தமாக பிரிக்க முடியாது.”

நமது மூளையில் உள்ள வேதியியல் வினைகள் நடப்பதால், மக்கள் முறிந்த உறவுகளை புதுப்பிக்க முனைகிறார்கள். ஒருவர் உறவு முறிவுக்கு பிறகு புதியவருடன் டேட்டிங் செய்தால், பழைய உணர்வுகளை அழிப்பதை விரைவுபடுத்துகிறது, மேலும் மீண்டும் ஒன்றிணைவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். மற்றவர்கள் பிரிந்த பிறகு அதிக உணர்ச்சிகளை அனுபவிக்கும் அதே வேளையில், மன்னிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்,

உறவில் முன் தீர்மானிக்கப்படாத உணர்வு கூட்டாளர்களை மீண்டும் முயற்சிக்க தூண்டக்கூடும் என்று டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் அவ்வப்போது தொடரும் உறவுகளை பற்றி ஆராய்ச்சி செய்யும் பேராசிரியர் ரெனே டெய்லி கூறுகிறார்.

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

இந்த ஜோடிகள் பிரிந்த காலத்தில் நிறைய மோதல்களை அனுபவிக்கக்கூடும், ஆனால் அவர்களது கூட்டாளருடன் இணைந்திருப்பதாகவோ அல்லது அன்பாகவோ உணரலாம், “என்கிறார் டெய்லி.

“எனவே மோதலை நிர்வகிக்கவோ அல்லது தீர்க்கவோ முடியாமல் போவது பற்றியதாக இருக்கலாம். முறிவுகள் தெளிவற்றதாக இருந்தால், மக்கள் உறவில் சாதகமான மாற்றங்களைச் செய்ததைப் போல உணரலாம், மீண்டும் முயற்சிக்கலாம் என்கிறார். “

உளவியலின் பிரபலமான இணைப்புக் கோட்பாடு, மற்றும் ஊடகங்களில் விவாதித்த விஷயமான டேட்டிங்கில் பொருந்தக்கூடிய சில பகுதிகளை அதிகம் விளக்கப்பட்டுள்ளது ஆனால் காதல் நல்லிணக்கத்தை விளக்கவில்லை என்றும் டெய்லி கூறுகிறார்.

குழந்தைகளுக்கான நடத்தை அவர்களின் வயதுவந்த வாழ்க்கையில் அவர்களின் இணைப்பு பாணியை வடிவமைக்கிறது என்று இணைப்புக் கோட்பாடு அறிவுறுத்துகிறது – அவர்கள் பிற்காலத்தில் மற்ற பெரியவர்களிடம் பாதுகாப்பாகவும், ஆர்வமாகவும் அல்லது அவர்களை தவிர்க்கவும் முடியும். ஒரு பாதுகாப்பான இணைப்பு பாணி ஆரோக்கியமான உணர்ச்சிபூர்வமான தகவல்தொடர்புகளைக் குறிக்கிறது, அதே நேரத்தில் ஆர்வத்துடன் இணைந்த நபர்கள் தங்கள் சுய மதிப்பை சந்தேகிக்கிறார்கள் மற்றும் அருகாமையில் இருக்க பலவற்றை முயற்சி செய்கிறார்கள். மூன்றாவது குழு, தவிர்க்கக்கூடிய இணைப்பு உள்ளவர்கள், இவர்கள் உணர்ச்சிவசமாக இல்லாதவர்களாகவும், தற்காப்பு மூலம் தன்னிறைவு பெற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

இந்த கோட்பாட்டின் படி, ஆர்வமுள்ள மற்றும் தவிர்க்க நினைக்கும் கூட்டாளர்கள் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவதாகவும், நிரந்தரமாக உறவு முறிவு கடினம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், ஆராய்ச்சி இதை ஆதரிக்கவில்லை என்று தோன்றுகிறது.

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

“இணைப்பு கவலை மற்றும் தவிர்ப்பதில் ஆன்-ஆஃப் மற்றும் கூட்டாளர்களிடையே மிகக் குறைந்த வேறுபாடுகளைக் கண்டறிந்தோம், அல்லது அத்தகைய கூட்டாளர்களுக்கான தரத்துடன் இந்த இணைப்பு நோக்குநிலைகள் எவ்வாறு தொடர்புடையவை என்பதில் வேறுபாடுகள் இல்லை. இணைப்புக் கோட்பாடு ஒரு நல்ல விளக்கமாகத் தோன்றினாலும், இதுபோன்றதை நாங்கள் கண்டறியவில்லை, “என்கிறார் டெய்லி.

யேன்ஸை போலவே, மன்னிப்புக்கு ஏக்கம் மற்றும் தனிமை ஆகியவை பங்களிப்பை கொண்டுள்ளன. “ஒரு முன்னாள் நபருடன் அவர்கள் நன்றாக நடந்துகொள்ளாவிட்டாலும் கூட அவர்கள் மீண்டும் ஒன்றிணைக்க விரும்புவதைக் காணும்போது, இது பொதுவாக தனிமை உணர்வுகளுடன் தொடர்புடையது, உறவைப் பற்றிய நேர்மறையான விஷயங்களைக் காணவில்லை, மற்றும் இழப்பு மற்றும் வருத்தத்தின் உணர்வுதான் என்கிறார் கென்டக்கி பல்கலைக்கழகத்தில் பாலியல் ஆரோக்கியத்தில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர் கிறிஸ்டன் மார்க். தற்போதைய உறவுகளின் தரம் பாதிக்கப்படத் தொடங்கும் போது கடந்தகால உறவுகளுக்கான ஏக்கம்தான் பெரும்பாலும் முதலில் வெளிப்படுகிறது என்று அவர் கூறுகிறார்.

இது தற்போதைய நிலைப்படி யேன்ஸின் நடத்தையையும் விளக்கக்கூடும். கொரோனா வைரஸ் பரவிய போது தனிமையாக உணர்ந்ததாக அவர் கூறுகிறார், இது தனது முந்தைய காதலரை அணுகவும், அவர்களின் உறவை சரிசெய்ய முயற்சிக்கவும் தூண்டியது.

லாக்டவுன் காலத்தில் தனிமையாக உணரும் மக்கள், ஊடகங்களால் மோசமாக பாதிக்கப்படக்கூடும். ஏனெனில் ஒருவர் தங்கள் முன்னாள் காதலர்களை பார்ப்பதை எளிதாக்குகிறது. நியூயார்க் பிரஸ்பைடிரியன் மருத்துவமனை வெயில்-கார்னெல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மனநல மருத்துவத்தின் இணை பேராசிரியர் கெயில் சால்ட்ஸ் கருத்துப்படி, எல்லா வகையிலும் தனிமையைத் தவிர்ப்பதற்கான விருப்பம் உள்ள மக்கள், தங்கள் முன்னாள் துணைவர்களிடம் சென்று சேரக்கூடும் என்கிறார்.

தங்களுடைய பழைய அன்பான நபர்களை கண்டறியவும் அவர்களை மீண்டும் இணைக்கவும் முகநூல் மற்றும் பிற சமூக ஊடகங்களின் கண்டுபிடிப்பு உதவுகிறது என்கிறார் சால்ட்ஸ். நாம் கடந்த கால உறவுகளை தேவையை விட அதிக அழகாக பார்க்க விரும்புகிறோம் என்றும், மக்கள் காலத்திற்கு ஏற்ப மாறுவார்கள் என்பதை மறந்து விடுகிறோம் என்றும், உறவை முறித்து முன்னோக்கி செல்வதை சமூக ஊடகங்கள் கடினமாக்குகின்றன என்றும், பழைய காதலன் அல்லது காதலியின் பதிவேற்றங்களை திருட்டுத்தனமாக பார்ப்பது ஆரோக்கியமற்றது என்கிறார்.

சமூக ஊடகங்கள் பிரிவை கடினமாக்குவதால் எதிர்மறையான முறிவு நடத்தைகளால் பாதிக்கப்படக்கூடும் என்பது ஆச்சரியமல்ல என்று மியாமி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பெரிட் ப்ரோகார்ட் கூறுகிறார். இவர் உணர்ச்சிகளின் தத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் காதல் புனைவு பற்றிய பல புத்தகங்களை எழுதியவர்.

“காதல் இருக்கும் வரை காதல் முறிவு தொடர்பான மோசமான நடத்தைகளும் இருக்கும் என்று ” என்று ப்ரோகார்ட் கூறுகிறார். “ஆனால் அது மிகவும் பரவலாகிவிட்டது, அவை வகைப்படுத்தப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன -கோஸ்டிங், சப்மரைனிங், , பெஞ்சிங், ப்ரெட் க்ரம்பிங் ஆர்பிடிங் , ஜாம்பியிங் என பல வகையாக உள்ளன.”

இளைய தலைமுறையினரின் கவலை மற்றும் மனச்சோர்வுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவையாக உள்ளன மற்றும் பழைய தலைமுறையை காட்டிலும் சமூக ஒப்புதலை மிகவும் வலுவாக நம்பியுள்ளனர். எனவே அவர்கள் இந்த உறவுகளின் பாதிப்புக்கு ஆளாகக்கூடும், என்று ப்ரோகார்ட் மேலும் கூறுகிறார்.

இளம் தலைமுறையினரின் கைகளில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளுடன் பிறந்தால், அவர்கள் ஆன்லைனில் டேட்டிங் தீர்வுகளைத் தேடுவார்கள். இதன் விளைவாக, அமெரிக்காவில் மட்டும் தனிப்பட்ட பயிற்சி வணிகங்கள் 2018 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டன, மேலும் இவர்களுக்கான ஒரு முக்கிய சந்தை உருவாகத் தொடங்கியது. பிரேக்-அப் பயிற்சியாளர்கள் இப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்களது முன்னாள் காதலை தொடர அல்லது மீண்டும் புத்துயிர் பெற உதவுவதாக உறுதியளிக்கிறார்கள். பலர் தங்கள் வலைப்பதிவுகள், யூடியூப் வீடியோக்கள் மற்றும் பாட்காஸ்ட்களில் உத்திகளை வழங்குகிறார்கள், அதனை மில்லியன் கணக்கானோர் பார்த்துள்ளார்கள்.

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

சில பிரபலமானவர்களில், நோ காண்டாக்ட் ரூல் எனப்படும் “தொடர்பு இல்லா விதி” (30 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை, சிலர் இது எல்லையற்றதாகக் கூட கூறுகிறார்கள்) என்பது ஒரு பொதுவான தந்திரமாகும். இந்த நேரத்தை அவர்கள் சுய வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். தங்களுக்கு கிடைத்த நல்ல நேரங்களை நினைவூட்டுவதற்கும், இந்த காலகட்டத்தில் எவ்வாறு மாறிவிட்டன என்பதைக் காண்பிப்பதற்கும் பலர் தங்கள் முன்னாள் காதலர்களுக்கு இதனை அனுப்ப பரிந்துரைக்கின்றனர்.

நரம்பியல் நிபுணரும் மானுடவியலாளருமான ஹெலன் ஃபிஷர் “தொடர்பு இல்லா விதி” நன்மை பயக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறார். போதைப்பொருட்களைத் தவிர்ப்பதற்கு குறைந்தது 90 நாட்களுக்கு ஒரு காலம் பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறுகிறார். ஆனால் இது உறவுகளுக்கு இது வேலை செய்யுமா?

“உடைந்த இதயத்தை சரிசெய்வதற்கான வழி போதைக்கு சிகிச்சையளிப்பதைப் போன்றது தான் – நீங்கள் அவர்களின் விஷயங்களை ஒதுக்கி வைக்கிறீர்கள், அவர்களின் சமூக ஊடகங்களைப் பார்ப்பதை நிறுத்துங்கள், அவர்களுடன் எந்த தொடர்பும் கொள்ளாதீர்கள் ” என்று ஃபிஷர் கூறுகிறார்.

இந்த விதி “அறிவியலில் சில அடிப்படைகளைக் கொண்டுள்ளது” என்றும் ப்ரோகார்ட் கூறுகிறார். வலுவான உணர்ச்சிகளின் தீவிரம் என்பது கோபம், துரோகம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது – இது நேரம் ஆக ஆக குறைகிறது.

20 ஆவது வயதில் இருக்கும் மற்றொரு ஹாங்காங் நபரான லிலியன், பிரிந்த சில நாட்களுக்குப் பிறகு இணையத்தில் தனது முன்னாள் காதலனுடன் சமரசம் செய்வதற்கான வழிகளைத் தேடியநபராவார். இதற்காக இணையத்தை தேடிய நபர்களில் ஒருவர். அவர் சமூக ஊடகங்களில் டேட்டிங் பயிற்சியாளரின் வீடியோக்களை கண்டார்.

முன்னாள் காதலி அல்லது காதலரை மன்னிப்பது ஏன் கடினமாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் காதலருடனான இடைவெளியை உருவாக்குவதற்கும் மறு ஈர்ப்பில் பணியாற்றுவதற்கும் பயிற்சியாளர் உதவிக்குறிப்புகளை வழங்கியதாக லிலியன் கூறுகிறார்.

“இது பிரிந்த பிறகு எனக்கு ஆறுதல் அளித்தது, ஆனால் அது என்னை மேலும் கவலையடையச் செய்தது. முன்னாள் காதலனை மீண்டும் தொடர்பு கொள்ள 30 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அடுத்த முறை நான் சந்தித்தபோது நான் என்னை மேம்படுத்திக் கொண்டேன் என்பதைக் காட்டுவதற்காக என்னால் நீண்ட நேரம் காத்திருக்க முடியவில்லை, “என்று லிலியன் கூறினார்.

இதற்கு பிறகு உடனடி ஆறுதலாக வரக்கூடும் என்றாலும், அவர்களின் பரிந்துரைகள் விஞ்ஞான ரீதியாக நம்பத்தகுந்ததாக இருக்காது. “உறவு முறிந்த முன்னாள் காதலர்களுக்கான நரம்பியல், உளவியல், அறிவாற்றல் அறிவியல், தத்துவம் அல்லது சமூக பணி போன்ற தொடர்புடைய துறைகளில் சரியான பயிற்சி – சுய பயிற்சி அல்லது கல்வி – இல்லை” என்று ப்ரோகார்ட் கூறுகிறார்.

பொருத்தமான பயிற்சி தொடர்பாக மற்றவர்களிடம் இருந்து கூட திருடுகிறார்கள் என்று உளவியலாளர் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் தகவல்களை உண்மையாக சரிபார்க்க முடியவில்லை.

“அவர்கள் ஒரு நல்ல தெரபிஸ்டை விட அதிக விலை கொண்டவர்களாக இருக்ககூடும், ஆனால் அவர்கள் அளிக்கும் அறிவுரைகள் சிறந்தவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல், நீங்கள் அவர்களின் தயாரிப்புகளை வாங்குவதற்கு உங்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கக்கூடும்” என்று அவர் கூறுகிறார்.

“அவர்களின் புத்தகங்கள் சில நேரங்களில் மிகவும் மலிவானவை, ஆனால் அவை மறுபரிசீலனை செய்யப்படவில்லை, அவை பெரும்பாலும் நடைமுறையில் பயனற்றவை.”

இந்த துறையை பற்றி நிபுணர்கள் இன்னமும் சந்தேகம் வைத்திருக்கிறார்கள். அதில் எந்தவிதமான விதிமுறைகளும் இல்லை. பிரிந்து செல்லும் நபர்களுக்கு பயிற்சி வழங்கும் நபர்களுக்கு “ஆலோசனை வழங்குவதற்கான தகுதிகள் இல்லை” என்று ப்ரோகார்ட்டின் கருத்தை டெய்லி விவரிக்கிறார். அதே நேரத்தில் அது ஒரு ‘ஒழுங்குபடுத்தப்பட்ட பகுதி’ அல்ல என்று சால்ட்ஸ் கூறுகிறார்.

“யாரும் தங்களை ஒரு பயிற்சியாளர் என்று அழைக்கலாம். எனவே அது தொடர்பாக நான் மிகவும் எச்சரிக்கையாக இருப்பேன். இந்த நபருக்கு உண்மையில் எவ்வளவு தெரியும் , தீவிரமான அல்லது முறைப்படுத்தப்பட்ட பயிற்சியின் நிலை இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். பல நாள் அல்லது பல வார இறுதிப் படிப்பு என்பது சிகிச்சையாளரை உருவாக்காது. அவர்களுக்கு யார் பயிற்சி அளிக்கின்றனர் மேலும் என்ன வகை பயிற்சி? ” சால்ட்ஸ் கேள்வி எழுப்புகிறார்.

பிரேக்-அப் பயிற்சிக்கு பணம் செலவழிப்பதற்குப் பதிலாக, கூகிள் ஸ்காலரில் உள்ள முறையான மூலங்களிலிருந்து உறவு முறிவுகள் மற்றும் உறவுகள் குறித்த இலக்கியங்களைப் படிக்குமாறு ப்ரோகார்ட் அறிவுறுத்துகிறார். ஆனால் ஒருவரை வாழ்க்கையில் மீண்டும் திரும்ப பெறுவதற்கு நேரத்தையும் சக்தியையும் செலவழிப்பது தொடர்பாக எச்சரிக்கிறார்.

“உங்கள் முன்னாள் காதலருடன் திரும்பிச் செல்ல நீங்கள் உங்கள் பாதையில் இருந்து வெளியேற வேண்டியிருந்தால், அவர்கள் உண்மையில் அதற்கு மதிப்புள்ளவர்களா?” என்று வினா எழுப்புகிறார்

நல்லிணக்கத்திற்கு “தந்திரங்கள்” எதுவும் இல்லை என்றும், ஆனால் நேர்மையுடன் தோல்வியுற்ற உறவில் என்ன தவறு ஏற்பட்டது என்பதைப் பற்றி பேசுங்கள் என்றும் அவர் கூறுகிறார்.

தங்களது முந்தைய காதலி அல்லது காதலருடனான விஷயங்களில் சமரசம் செய்ய முடியாதவர்களுக்கு, “எதிர்ப்பு” நிலைக்குப் பிறகு, அவர்களின் மூளை விரக்தி” நிலைக்குச் செல்லலாம், பின்னர் இறுதியாக ஏற்றுக்கொள்வது, அலட்சியம் மற்றும் வளர்ச்சி என்று அமையும் என்று ஃபிஷர் கூறுகிறார்.

“நீங்கள் மிகுந்த வலியையும் பதட்டத்தையும் அனுபவிக்கிறீர்கள், ஆனால் இறுதியாக மீட்கப்படுவீர்கள்” என்று ஃபிஷர் முடிக்கிறார். “உங்களைத் தூக்கி எறியும் நபரை நீங்கள் ஒருபோதும் மறக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேறி, புதியவரை நேசிப்பீர்கள் என்கிறார்.

சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா வைரஸ் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

9 செப்டம்பர், 2020, பிற்பகல் 1:10 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »