Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): சீன தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் அளித்த ஐக்கிய அரபு அமீரகம்

ஐக்கிய அரபு அமீரகம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி ஒன்றுக்கு அவசர அனுமதி வழங்கியுள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மனிதர்கள் உடலில் செலுத்தப்பட்டு, ஆறு வார கால பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சீன அரசுக்கு சொந்தமான சீனோஃபார்ம் எனும் மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை ஜூலை மாதம் தொடங்கியது. இந்த பரிசோதனை இன்னும் முற்றுப்பெறவில்லை.

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »