Press "Enter" to skip to content

பாம்பை முக கவசமாக அணிந்த பேருந்து பயணி – இங்கிலாந்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

உலக அளவில் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பரவலை தடுக்க மக்களுக்கு இருக்கும் ஒரே நடைமுறை வாய்ப்பாக முக கவசம் அணிய வேண்டும் என உலக சுகாதார அமைப்பும் பல்வேறு நாடுகளின் அரசும் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால்,இங்கிலாந்தின் கிரேட்டர் மேன்செஸ்டரில் பயணி ஒருவர் வித்தியாசமாக மலைப்பாம்பை முக கவசம் போல மூடிக்கொண்டு பயணம் செய்த சம்பவம் சக பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஸ்வின்டொனில் இருந்து மேன்செஸ்டர் நோக்கிச் சென்ற பேருந்தில் ஏறிய அந்த பயணி திடீரென தனது மலைப்பாம்மை குழுத்தில் சுற்றிக் கொண்டு முக கவசம் போல அதை அணிந்துள்ளதாகக் கூறினார்.

அவரது செயலைப் பார்த்த சக பெண் பயணி, ஏதோ நகைச்சுவையாக பாம்பு போன்ற தோற்றம் கொண்ட பொருளை முகத்தை சுற்றி அந்த நபர் மூடியிருப்பதாகக் கருதியதாகத் தெரிவித்தார்.

ஆனால், பிறகுதான் அந்த நபர் நிஜ பாம்பை முக கவசம் போல சுற்றியிருப்பதைக் கண்டு அனைவரும் பீதியடைந்தனர்.

அந்த பாம்பு அந்த நபரின் கழுத்தில் அமைதியாக இருந்ததாகவும், வேறு பயணிகளுக்கு அது எந்த தொந்தரவையும் தரவில்லை என்றும் பேருந்தில் இருந்த பயணிகள் தெரிவித்தனர்.

இதை விவரித்த அந்த பெண் பயணி, நல்ல வேளையாக யாருடைய கண்ணையும் அந்த பாம்பு கொத்தவில்லை என்றார்.

பாம்பு

இங்கிலாந்தில் பொது போக்குவரத்தில் பயணம் செய்வோர், முக கவசம் அணிவதுக ட்டாயமாகும். அதே சமயம், 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் உடல் சுகவீனம் அல்லது அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கும் முக கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முக கவசம் என்பது அறுவை சிகிச்சை அறையில் மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் உறை மட்டுமின்றி பயணிகள் தங்களின் வீடுகளிலேயே முக கவசத்தை தயாரிக்கலாம் அல்லது கைகுட்டை போன்ற பொருளால் முகத்தை மூட பயன்படுத்தலாம் என்று மேன்செஸ்டர் போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

இந்த வரிகளில் உள்ள வார்த்தையை வேறு மாதிரியாகப் புரிந்து கொண்டு பிற பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்த பயணி, தனது வளர்ப்புப் பாம்பை முக கவசமாக பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

அவரது செயல் அவருக்கு புகழை தேடிக்கொடுத்திருந்தாலும், ஆபத்தான வகையில் பாம்பை பேருந்தில் கொண்டு வந்ததற்காக பலரது எதிர்ப்புக்கும் அந்த பயணி ஆளாகியிருக்கிறார்.

கிரேட்டர் மேன்செஸ்டர் போக்குவரத்துத்துறை உயரதிகாரிகளும், முக கவசாக பாம்பை பயன்படுத்த விதிகள் அனுமதிக்கவில்லை என்று கூறி அந்த பயணியை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »