Press "Enter" to skip to content

இஸ்லாத்தின் பொற்காலம்: ‘ஆபத்தான, மாய மந்திரம்’ நிறைந்த கணிதவியலாளர் அல்-குவாரிஸ்மியின் கதை

பிபிசி வானொலி 3-யின் சிறப்புத் தொடரான ‘இஸ்லாத்தின் பொற்காலம்’ என்ற இந்த தொடரில், எழுத்தாளரும் ஒலிபரப்பாளருமான ஜிம் அல் கலீல், அல்-குவாரிஸ்மி பற்றி நமக்குச் சொல்கிறார்.

பிபிசி உருது சேவை, இந்த தொடரை வானொலியில் ஒலிபரப்ப இதை மொழிபெயர்த்துள்ளது.

முகமது இப்னே மூசா அல்-குவாரிஸ்மி ஒரு பாரசீக கணிதவியலாளர், வானியலாளர், ஜோதிடர், புவியியலாளர் மற்றும் அறிஞர் ஆவார். அவர் பக்தாத்தின்எந்திர இருசக்கரக்கலன் (பைக்)த்துல் ஹிக்மத் (ஹவுஸ் ஆப் விஸ்டம்) உடன் சம்பந்தப்பட்டிருந்தார் . அந்த நேரத்தில், ஹவுஸ் ஆப் விஸ்டம் விஞ்ஞான ஆராய்ச்சி மற்றும் கல்வியின் புகழ்பெற்ற மையமாக இருந்தது மற்றும் இஸ்லாமிய பொற்காலத்தின் சிறந்த அறிஞர்கள் இங்கு கூடினர் .

அல்-குவாரிஸ்மி கி.பி 780 இல் பெர்சியாவில் பிறந்தார்.கலீஃபா ஹாரூன் ரஷீத்தின் மகன் கலீஃபா அல்-மாமுனின் வழிகாட்டுதலின் கீழ் ஹவுஸ் ஆப் விஸ்டம் -ல் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்ற படித்தவர்களில் ஒருவர்.

ஒரு நபர் நோய் ஏற்பட்டதால் இரண்டு அடிமைகளை விடுவத்தார் என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒருவரின் மதிப்பு முந்நூறு திர்ஹாம் , மற்றொருவரின் மதிப்பு ஐநூறு திர்ஹாம். முன்னூறு திர்ஹாம் மதிப்பிலான அடிமை, சிறிது நேரத்திற்குப் பிறகு இறந்துவிடுகிறார். அவர் ஒரே ஒரு மகளை விட்டுச் செல்கிறார். பின்னர் அந்த அடிமைகளின் உரிமையாளரும் இறந்துவிடுகிறார், அவரின் வாரிசு அவருடைய ஒரே மகள். இறந்த அடிமை 400 திர்ஹாம் சொத்து விட்டு செல்கிறார். விடப்படுகிறார். எனவே இப்போது அனைவருக்கும் எவ்வளவு பங்கு கிடைக்கும்”?

கணிதத்தின் இந்த குழப்பமான கேள்வி ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்த கேள்வி உண்மையில் வாரிசுகள் மத்தியில் சொத்து விநியோகத்திற்கு வழி காட்டுகிறது . அரபு மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகம் , உலக அளவில் அதன் தலைப்பு ‘கிதாப் அல்-ஜாபர்’ என்ற பெயரால் அறியப்படுகிறது.

இந்த புத்தகத்தின் ஆசிரியர்தான் இன்று நமது கட்டுரையின் பொருள் – முகமது இப்னே மூசா அல்-குவாரிஸ்மி.அவர் மத்திய கிழக்கில் பல பாடங்களில் தேர்ச்சி பெற்றார். நான் (ஜிம் அல்-கலீல்) ஈராக்கில் ஒரு பள்ளியில் படிக்கும் போது ஒரு வரலாற்று கட்டுரையில் அவரது பெயரை முதலில் கேள்விப்பட்டேன்.

அல்-காவரிஸ்மி

இந்த புத்தகத்தில் விதை கணிதம் என்ற தலைப்பில் அவர் முதல் முறையாக எழுதுகிறார். இந்த வார்த்தை இந்த புத்தகத்தின் தலைப்பிலிருந்து நேரடியாக எடுக்கப்பட்டது மற்றும் அதற்கு கணிதத்தின் துணைப் பாடத்தின் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

குவாரிஸ்மி கி.பி 780 இல் பிறந்தார், அவரது பெயரில் உள்ளது போல், அவர் மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் அமைந்துள்ள குவாரிஸ்ம் மாகாணத்தைச் சேர்ந்தவர்.

அவரது வாழ்க்கையைப் பற்றி நமக்கு மிகக் குறைவான தகவல்களே உள்ளன,ஆனால் அவர் ஒன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பாக்தாத்திற்கு வந்தார் என்பது நமக்கு தெரிய வருகிறது. அந்த நேரத்தில், பாக்தாத் சக்திவாய்ந்த அப்பாஸித் கலிபாவால் ஆளப்பட்ட ஒரு பரந்த இஸ்லாமிய பேரரசின் தலைநகராக இருந்தது.

அவர் கலீஃபா அல்-மமுனுக்காக வேலை செய்தார். கிரேக்க புத்தகங்களை அரபு மொழியில் மொழிபெயர்ப்பதில் அபிமானியாக இருந்த கலீஃபா மாமூன், வரலாற்றில் விஞ்ஞான ஆராய்ச்சியில் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட முன்னோடிகளில் ஒருவராக இருந்தார்.

அல்-குவாரிஸ்மி கலீபாவால் உருவாக்கப்பட்ட ‘பைத் அல்-ஹிக்மத்’ (ஹவுஸ் ஆப் விஸ்டம்) என்ற அமைப்பில் பணியாற்றினார். இது கேட்பதற்கு ஒரு போலி நிறுவனம் போல் தோன்றியது . இது மொழிபெயர்ப்பு மற்றும் அறிவியலில் அசல் ஆராய்ச்சியின் மையமாக இருந்தது, மேலும் அரபு அறிவியலின் பொற்காலம் என்று அழைக்கப்படும் ஒரு சகாப்தத்தின் சிறந்த அறிவாளிகள் இங்கு கூடினர் .

அரபு என்ற சொல் இங்கு பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் பெரும்பாலான புத்தகங்கள் அந்த நேரத்தில் அரபியில் எழுதப்பட்டிருந்தன.ஏனென்றால் அது மன்னராட்ச்சியின் அதிகாரபூர்வ மொழி மட்டுமல்ல, முஸ்லிம்களின் குர்ஆன் புனித நூலிலும் அதே மொழியில் உள்ளது.

இந்த அறிவியல் புத்தகங்கள் தத்துவம், மருத்துவம், கணிதம், ஒளியியல் மற்றும் வானியல் உள்ளிட்ட பல அறிவியல் பாடங்களை உள்ளடக்கியது. இந்த காலகட்டத்தின் சிறந்த விஞ்ஞான சாதனைகளில், அல்-குவாரிஸ்மியுடன் நேரடியாக தொடர்புடைய சில சாதனைகளை நாம் பார்க்கலாம் .

அல்-காவரிஸ்மி

ஒன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில், கலீஃபா அல்-மமுன் வானியல் ஆராய்ச்சிக்காக பாக்தாத்தில் ஆய்வகங்களை கட்டினார். ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கிரேக்க வானியல் பற்றிய விமர்சன ஆய்வுகள் தொடங்கின. இந்த நேரத்தில், அல்-குவாரிஸ்மியின் மேற்பார்வையில் பல ஆராய்ச்சியாளர்கள் சூரியன் மற்றும் சந்திரன் குறித்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.

இந்த நேரத்தில், ஒரே இடத்தில் அமைந்துள்ள 22 நட்சத்திரங்களின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை அட்டவணை செய்யப்பட்டது. இதற்கிடையில், அல்-மாமுன் காசியன் மலையின் சரிவுகளில் மற்றொரு ஆய்வகத்தை கட்ட உத்தரவிட்டார், அங்கிருந்து டமாஸ்கஸ் நகரம் தெளிவாகத் தெரியும். இந்த ஆய்வகத்தை கட்டியெழுப்புவதன் நோக்கம் இது தொடர்பாக கூடுதல் தரவுகளை சேகரிப்பதாகும்.

இந்த வேலை முடிந்ததும், அல்-காவரிஜ்மியும் அவரது கூட்டாளிகளும் பல நட்சத்திரங்களின் இருப்பிடம் குறித்த தரவு அட்டவணையைத் தயாரித்திருந்தனர்.

இந்த அறிஞர்களால் தொடங்கப்பட்ட மற்றொரு பெரிய திட்டம் இன்னும் தொலைநோக்குடன் இருந்தது.

கிரேக்க வானியலாளர் டோனமி தனது புகழ்பெற்ற புத்தகமான ‘த ஜியாகிராபி ‘ இல் உலகின் புவியியல் தொடர்பான அனைத்தையும் பதிவு செய்தார். இவரது படைப்புகளின் அரபு மொழிபெயர்ப்பு இஸ்லாமிய உலகில் புவியியலில் ஆர்வத்தை உருவாக்கியது என்று கூறப்படுகிறது.

முக்கிய இஸ்லாமிய நகரங்களான மக்கா அல்லது தலைநகர் பாக்தாத் டோனமியின் வரைபடத்தில் சேர்க்கப்படாததால் உலகின் புதிய வரைபடத்தை உருவாக்க அல்-மாமுன் தனது அறிஞர்களுக்கு அறிவுறுத்தினார். டோனமி சகாப்தத்தில் மக்கா நகரத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் இருக்கவில்லை , பாக்தாத் அந்த நேரத்தில் அமைக்கப்படவில்லை.

அல்-குவாரிஸ்மியும் அவரது சகாக்களும் இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையிலான தூரத்தை அளவிட முடிவு செய்தனர். இது சம்பந்தமாக, சந்திர கிரகணத்தின் போது அளவீட்டிற்கான கூடுதல் தரவுகளை அவர் சேகரித்தார்.அந்த பண்டைய காலகட்டத்தில், இந்த இரண்டு நகரங்களுக்கிடையில் அவர் கணித்த தூரம் இன்றைய புள்ளிவிவரங்களை விட இரண்டு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது. இதற்குப் பிறகு, அவர் மற்ற முக்கியமான இடங்களின் மைய புள்ளிகளை கண்டறிய, அவற்றின் எல்லைகளை மறு பரிசிலனை செய்ய முயன்றார்.

உதாரணமாக, அவரது வரைபடம் அட்லாண்டிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் திறந்த நீர்வழிகளாக சித்தரிக்கிறது. ஆனால் டோனமி தனது புத்தகத்தில் இவற்றை நிலப்பரப்பு சூழ்ந்த கடல்களாக விவரிக்கிறார்.

அல்-காவரிஸ்மி

அல்-குவாரிஸ்மியின் புத்தகம் ‘சூரத் அல்-அர்ஸ்’ அதாவது (உலகின் வரைபடம்) காரணமாக இஸ்லாமியத்தின் முதல் புவியியலாளர் என்ற மரியாதை அவருக்கு உண்டு. இந்த புத்தகம் கி.பி 833 இல் நிறைவடைந்தது. இது கலீஃபா அல் மமுன் இறந்த ஆண்டாகும். இந்த புத்தகத்தில், ஐநூறு நகரங்களின் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகை அட்டவணைகள் உள்ளன.

இந்த புத்தகத்தில், பல்வேறு இடங்கள், நகரங்கள், ஆறுகள், மலைகள், கடல்கள் மற்றும் தீவுகள் என பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அட்டவணையிலும், இந்த இடங்கள் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

இருப்பினும், இந்த சாதனைகள் அனைத்தும் கணிதத் துறையில் அவர் செய்த சாதனைகளுக்கு முன்னால் மங்கலாகின்றன. எண்கள் மற்றும் எண்களில் எழுதப்பட்ட அவரது ஆய்வுக் கட்டுரைகளால் மட்டுமே தசம எண் முறை ( டெசிமல் நம்பர் சிஸ்டம் )முஸ்லிம் உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவரது ‘அல்-ஜு ம் வால்-தஃப்ரிக் பில்-ஹிந்த்’ புத்தகம் கணித விஷயத்தில் மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்தது .

இந்த புத்தகம் கி.பி 825 இல் எழுதப்பட்டது. இருப்பினும், உண்மையான அரபு மொழிபெயர்ப்பு எதுவும் இல்லை மற்றும் புத்தகத்தின் தலைப்பும் ஒரு யூகம் மட்டுமே.

அல்-காவரிஸ்மி

இருப்பினும், தசம அமைப்பில் லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் புத்தகம் இதுவாக இருக்கலாம். “அல்-குவாரிஸ்மி சொல்கிறார் …” என்ற லத்தீன் மொழியில் எழுதப்பட்ட இந்த வார்த்தைகளுடன் இது தொடங்குகிறது.

கணிதம் தொடர்பான பல விஷயங்கள் இந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளன, இங்கிருந்துதான் அல்கோரிதம் என்ற சொற்களஞ்சியம் உருவானது, இது உண்மையில் லத்தீன் மொழியில் அல்-குவாரிஸ்மியைப் சொல்லும் முறையாகும். உண்மையில், அல்-குவாரிஸ்மியின் இந்த படைப்பும் அதற்கு முன்னர் செய்யப்பட்ட படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டன. இந்த மொழிபெயர்ப்புகள் ஐரோப்பாவில் விமர்சிக்கப்பட்டன. ஐரோப்பா ஒரு இருண்ட கட்டத்தை கடந்து கொண்டிருந்த காலம் இது. குவாரஸ்மியின் பணி ‘ஆபத்தானது’ அல்லது ‘மாய மந்திரம்’ என்று கருதப்பட்டதற்கு இதுவே காரணம்.

அவரது மிகப்பெரிய படைப்பு நிச்சயமாக விதை கணிதம் குறித்த அவரது புத்தகமாகும். அல்-குவாரிஸ்மி பண்டைய பாரசீக மதமான ஜோராஸ்ட்ரியன் ஐ (பார்ஸி ) பின்பற்றுபவர், பின்னர் அவர் இஸ்லாமிற்கு மாறினார் என்று தோன்றுகிறது. கிதாப் அல்-ஜபரின் முதல் பக்கத்தில், அவர் ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மனிர்ராஹிம்’ (ஆரம்பம் அல்லாஹ்வின் பெயரில்,இவர் மிகவும் கருணை உள்ளவர்)என்று எழுதியுள்ளார். இன்றும், முஸ்லீம் எழுத்தாளர்கள் எழுதிய பெரும்பாலான புத்தகங்கள் இந்த வாக்கியத்திலிருந்தே தொடங்குகின்றன.

இருப்பினும், அல்-குவாரிஸ்மி பாரம்பரியத்திற்கு ஏற்ப இதை எழுதியிருக்கலாம். ஏனென்றால், அவருக்கு முழு ஆதரவும் தந்த முஸ்லிம் கலிபாவை கோபப்படுத்த அவர் விரும்பவில்லை. இந்த புத்தகத்தில், அல்-குவாரிஸ்மி கணிதத்தின் தெளிவற்ற விதிகளை இணைத்தார், இது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.

பின்னர் அவர் இந்த விதிகளின் வரைவைத் தயாரித்தார், இதன் மூலம் பாரம்பரியம், வர்த்தகம் மற்றும் விவசாயம் தொடர்பான அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.

அல்-குவாரிஸ்மியின் பின்னர் வந்த முஸ்லீம் கணிதவியலாளர்களைப் பாராட்ட வேண்டியது அவசியம், அவர்கள் அவரது படைப்புகளை விளம்பரப்படுத்தினார், மேலும் ஐரோப்பாவில் அவரது பணிகள் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்னர் அதன் நம்பகத்தன்மைக்கான சான்றுகளையும் வழங்கினர்.

12 ஆம் நூற்றாண்டில், அவரது புத்தகம் இரண்டு முறை லத்தீன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. ஒருமுறை பிரிட்டனின் ராபர்ட் ஓச்செஸ்டர் மற்றும் இத்தாலியில் ஜெரார்ட் ஆஃப் கிரெமோனா ஆகியோர் அவரது புத்தகத்தை மொழிபெயர்த்தனர். அவரது பணியை மத்திய கிழக்கில் மிகப் பெரிய கணிதவியலாளராக இருந்த ஃபெப்னாச்சியும் அறிந்திருந்தார். அல்-குவாரிஸ்மியின் படைப்புகளை அவர் தனது புகழ்பெற்ற புத்தகமான ‘லேபர் அபாச்சி’ இல் மேற்கோள் காட்டினார்.

அல்-காவரிஸ்மி

இங்கே நாம் கணிதத்தின் ஒரு கிளையை கண்டுபிடித்ததற்காக அல்-குவாரிஸ்மிக்கு பெருமை வழங்கவில்லை என்பதில் கவனமாக இருக்க வேண்டும் . அதற்கும் காரணம், இன்று நாம் இதற்குப் பயன்படுத்தும் பெயர், ‘அல்ஜீப்ரா’, அல்- குவாரிஸ்மி புத்தகத்தின் பெயரிலிருந்துதான் நடைமுறைக்கு வந்தது.

எடுத்துக்காட்டாக, கிரேக்க மற்றும் பாபிலோனிய கணிதவியலாளர்கள் அல்-குவாரிஸ்மிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே கணித சமன்பாடுகளை தீர்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இது தவிர, அவருக்கு முன் சிறந்த கிரேக்க கணிதவியலாளர் டியோபாண்ட் மற்றும் இந்து கணிதவியலாளர் பிரம்மகுப்தா ஆகியோரும் இதில் பணியாற்றியுள்ளனர். இந்த விஷயத்தின் தலைப்பை அவரது புத்தகங்களுடன் இணைத்திருக்க முடியாதா ? என்னைப் பொறுத்தவரை இல்லை , ஏனென்றால் அல்-குவார்ஸ்மியின்படி , அவரது புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருந்தது, அதன்படி, விதை கணிதத்தின் மூலம் தரவை மாற்ற முடியும்.

இருப்பினும் அவரது நோக்கம் இதைவிட பெரியதாக இருந்தது.அர்த்தமெடிக்ஸில் எளிதான மற்றும் மிகவும் பயனுள்ள சில விஷயங்களைச் சொல்வதே தனது புத்தகத்தின் நோக்கம் என்று அவர் தெளிவுபடுத்தினார். உதாரணமாக, ஆண்களுக்கு சொத்தை விநியோகிக்கும் பணியில்,வணிகத்தையும் சொத்துக்களையும், நீதித்துறை அமைப்புக்கு முன்னால் பிரிக்க வேண்டியது அவசியம்.இது தவிர, அவர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல், நிலத்தை அளவிடுதல், கால்வாய்களை தோண்டுவது,வடிவியல் வரையறை போன்ற பல விஷயங்களில் கணிதம் தேவைப்படுகிறது.

அல்-ஜாபர் புத்தகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு தத்துவார்த்த இயற்பியலாளராக, முதல் பகுதியில் எனக்கு மிகவும் சுவாரஸ்யமான விஷயம் உள்ளது. ஏனெனில் இங்கே அல்-காவரிஸ்மி விதை கணிதத்தின் விதிகளை உருவாக்கியிருக்கிறார். கேள்விகள் மற்றும் வெவ்வேறு சமன்பாடுகளை தீர்க்க, வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தவும். அவரது அளித்த ஒவ்வொரு பதிலுக்கும் சித்திரமாக ஆதாரங்கள் உள்ளன.

புத்தகத்தின் இரண்டாம் பகுதி அவற்றின் முறைகளைப் பயன்படுத்துவது பற்றியது. இதன் மூலம் அவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். இருப்பினும், இந்த புத்தகம் இன்று விதை கணிதத்தில் காணப்படும் புத்தகங்களிலிருந்து மிகவும் வித்தியாசமானது. தனது புத்தகத்தின் பக்கங்களை சின்னங்கள் மற்றும் சமன்பாடுகளால் நிரப்புவதற்கு பதிலாக, இதையெல்லாம் மிகவும் சாதாரண மொழியில் எழுதியுள்ளார்.

விதை கணிதத்தின் சின்னங்கள் மூலம் இரண்டு வரிகளில் சொல்லக்கூடிய விஷயம் இரண்டு பக்க விளக்கத்தின் மூலம் விளக்கப்பட்டது.

அல்-குவாரிஸ்மிக்கு நீண்ட காலத்திற்கு முன்பே, டையோபாண்ட் மற்றும் இந்து கணிதவியலாளர்கள் தங்கள் சமன்பாடுகளை அடிப்படை சின்னங்களுடன் விளக்கிக் கொண்டிருந்தார்கள் என்று இங்கு நான் உங்களுக்குச் சொ்ள்ள விரும்புகிறேன . ஆனால் அல்-குவாரிஸ்மியும் அவரது விதை கணிதமும் இருபடி சமன்பாடுகளுக்கு அப்பால் செல்ல முடியவில்லை மற்றும் டய்பெண்ட்ஸ் மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு தேடினார் . அல்-குவாரிஸ்மியின் விதை கணித கேள்விகளை தீர்க்கும் முறைகளும் பழைமையானவை , அதாவது ‘கப்லேடிங் தா ஸ்கொயர் ‘ போன்றவற்றை தீர்க்கும் முறை , பின்னர் அவற்றை ஆதரிக்கும் வாதங்கள் பலவீனமானவையாக இருந்தன .

அல்-குவாரிஸ்மி பிரபலமானத்திற்கு காரணம், அவரது புத்தகத்தினால்தான். விதை கணிதமே பிரபலமானது என்றும் நான் கேள்விப்பட்டேன். ஏனென்றால் அவர் அதை மிகவும் எளிதாக்கியதால் பலர் அதைப் பயன்படுத்த முடிந்தது. இருப்பினும், இது ஒரு பலவீனமான வாதம்.

இன்றைய புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பிரபலமாக இருப்பதற்கான காரணம் அவரது ‘எ ப்ரீப் ஹிஸ்ட்ரீ ஆப் டைம்’ புத்தகம்தான், அண்டவியல் பற்றிய அவரது முக்கியமான ஆராய்ச்சி மற்றும் கருந்துளைகள் பற்றிய அவரது கோட்பாடு அல்ல என்றும் நாம் கூறலாம். இவை அனைத்திற்கும் மாறாக ,சின்னங்களை யார் பயன்படுத்தினார்கள், அல்லது ஏதேனும் வடிவியல் சான்றுகள் இருந்தனவா, இந்த சமன்பாடுகள் எவ்வளவு சிக்கலானவை, அவற்றின் எழுத்து பொது மக்களை சென்றடைந்ததா இல்லையா என்பது விவாதத்தில் முக்கியமல்ல.

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

காண்பி


<?xml version=”1.0″ encoding=”UTF-8″????>Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஒவ்வொரு நாட்டிலும் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காட்டும் வட்டம்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது

22 செப்டம்பர், 2020, பிற்பகல் 3:42 IST

இருப்பினும், அல்-குவாரிஸ்மி முதன்முறையாக செய்த பணிகள் மற்றும் அதன் காரணமாக அவர் வித்தியாசமாகத் தெரிகிறார். இது ஒரு சிறிய விஷயம், ஆனால் மிக முக்கியமானது. அதாவது, குறிப்பிட்ட கேள்விகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அல்-குவார்சிமி பொது மக்களால் புரிந்து கொள்ளக்கூடிய விதிகளை விளக்கினார், இதன் மூலம் பிரசினைகள் தீர்க்கப்பட்டன . அதேபோல் படிப்படியாக அல்கோரிதம்ஸ் மூலம் சமன்பாடுகளை தீர்க்க முடிந்தது .

இதேபோல், அல்-குவாரிஸ்மி விதை கணிதத்தை ஒரு தனி பாடமாகக் காண முடியும், தரவை மாற்றுவதற்கான வெறும் ஒரு நுட்பமாக மட்டுமல்ல என்பதை உறுதிசெய்தார் .

ஒருபுறம் நீங்கள் குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளைத் கொடுத்து விட்டு, படிப்பவர்களிடம் அவர்கள் இதற்கு தீர்வு காணட்டும் என்று விட்டுவிடுகிறீர்கள் . மறுபுறம், அல்-குவாரிஸ்மி இந்த தீர்வை சாதாரண மொழியில் தெளிவுபடுத்துகிறார். ஆம் , அவர் பின்னர் அதை குறிப்பிட்ட எண்களுடன் விளக்குகிறார், ஆனால் அதைத் தீர்க்க அவர் கடைப்பிடிக்கும் முறை சாதாரண மொழியில் புரிந்து கொள்ள முடிகிறது.

இருப்பினும், அல்-குவாரிஸ்மி விதை கணிதத்தை சின்னங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன்படுத்துவதன் மூலம் விளக்கினார், இதை அவருக்கு முன்னர் டையோபண்ட் செய்திருந்தார். ஆனால் அல்-குவாரிஸ்மியின் விதை கணிதம், இன்று பயன்படுத்தப்படும் விதை கணிதத்திற்கு மிக நெருக்கமானதாக உள்ளது.

அல்-குவாரிஸ்மி 858 இல் இறந்தார்,அவர் அரித்மெடிக்ஸ் மற்றும் ஜியோமெட்ரி இருந்தும்கூட, துணை கருத்தாக,விதை கணிதத்தை கணிதத்தின் பாடமாக அறிமுகப்படுத்திய ஒரு கணிதவியலாளராக அறியப்படுகிறார்

விஞ்ஞான உலகின் சிறந்த வரலாற்றாசிரியரான ஜார்ஜ் சார்டன், பல பிரிவுகள் கொண்ட தனது புத்தகம் ‘த இண்ட்ரொடக்ஷன் டு சயின்ஸ் ‘ற்கு மிகவும் பெயர் பெற்றவர். இந்த புத்தகத்தில், அறிவியலின் வரலாற்றை அவர் பல பகுதிகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு பகுதியும் அரை நூற்றாண்டு வரலாற்றை உள்ளடக்கியது. அந்த பகுதியில் அந்த காலத்தின் மிக முக்கியமான விஞ்ஞானியின் பெயர் இடம்பெற்றுள்ளது . அதில், கி.பி 800 முதல் 850 வரையிலான காலகட்டம் ‘அல்-குவாரிஸ்மியின் சுற்று.’என பெயரிடப்பட்டுள்ளது .

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »